- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தி பட சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபரீதம்... சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு... என்ன ஆனது?...

கார்த்தி பட சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபரீதம்… சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு… என்ன ஆனது?…

- Advertisement -

நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பின் போது தான் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது. நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் அவரது 26 ஆவது திரைப்படமாக வா வாத்தியார் உருவாகி இருக்கிறது. இதனை, நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார்.

 

இவர் ஏற்கனவே சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய திரைப்படங்களை எடுத்திருப்பதால் இந்த படத்தின் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் உடனும் கைகோர்த்து மெய்யழகன் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.

 

இதில் ஸ்ரீதிவ்யா அரவிந்த்சாமி உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது தனது சர்தார் 2 திரைப்படத்தில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் தொடங்கியது. இதன் முதல் பாகம், 2022 ஆம் ஆண்டு வெளியானது.

 

தீபாவளி பண்டிகைக்கு, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்துடன் சர்தார் போட்டியிட்டது. இதில் பிரின்ஸ் திரைப்படம், எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் கார்த்தி இரண்டு வேடத்தில் நடித்திருந்த சர்தார் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது.

 

இந்த நிலையில் தான் அதன் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பி எஸ் மித்ரன். ஆனால் இதற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பை ஏற்றிருப்பது, மேயாத மான் திரைப்படத்தை எடுத்த ரத்னகுமார். இதன் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

 

இன்னையில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சர்தார் 2 படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் கீழே விழும்போது படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

சற்று முன்