விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான இயக்குனராக மாறினார் மனு ஆனந்த். தற்போது அவர் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படம் குறித்து ஏற்கனவே பேசி இருந்த இயக்குனர் மனு கூறியதாவது, இது ஒரு ஆக்சன் படமாக இருக்கும். அதே சமயம் இருவரை சுற்றி இந்த கதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே ஒரே நோக்கத்திற்காக செயல்பட கூடியவர்கள். அவர்களின் ஒரு சில முடிவுகள் அவர்களை எந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்பதை உணர்த்தும் ஒரு படமாக இந்த படம் இருக்கும் என்று அவர் கூறி இருந்தார்.
அதேபோல ஆர்யாவோடு வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. நான் மிஸ்டர் எக்ஸ் கதையை ஆர்யாவிடம் கூறியதும் அவர் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார். அதேசமயம் எஃப் ஐ ஆர் படத்தை இயக்குவதற்கு முன்பே எனக்கு கௌதம் கார்த்திக்கை நன்கு தெரியும். அதனால் மிஸ்டர் எக்ஸ் படத்தை பற்றி அவரிடம் சொன்னபோது அவரும் உடனே இதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார்.
இப்படியாக மனு ஏற்கனவே இந்த படம் குறித்து கூறியிருந்த நிலையில் இந்த இந்த படம் குறித்த மேலும் ஒரு அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ஆர்யா தனது பிட்டர் பக்கத்தில் அதை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமார் இணைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன் என்று அவர் ட்வீட் செய்து உள்ளார்.
Very excited to have our Supreme Star @realsarathkumar sir for #MrX.@Gautham_Karthik @ManjuWarrier4 @AnaghaOfficial.
Written and directed by @itsmanuanand.@prince_pictures @lakku76 @venkatavmedia @dhibuofficial @vincentcinema @rajeevan69 @editor_prasanna @silvastunt… pic.twitter.com/p0u1H0ZEGM
— Arya (@arya_offl) July 28, 2023
வாரிசு, பொன்னியின் செல்வன், போர்த் தொழில் இப்படி இந்த வருடம் மட்டுமே பல படங்களில் சரத்குமாரின் சிறப்பான நடிப்பை நாம் பார்த்து உள்ளோம். அந்த வரிசையில் தற்போது மிஸ்டர் எக்ஸும் இணைந்துள்ளது. இதிலும் அவரது நடிப்பு திறமை மூலம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்





