- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் மணிரத்னம் படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகர் மகள் -...

இயக்குனர் மணிரத்னம் படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகர் மகள் – அப்பாவுக்கு பயந்துதான் நடிக்கலையோ…?

- Advertisement -

சினிமா துறையில் வாய்ப்புகள் என்பது தானாக அமைவது வெகுசிலருக்கு மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் போராடி தான் அந்த வாய்ப்பை பெற வேண்டியிருக்கிறது. நடிகர், நடிகையர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாத்துறை சார்ந்தவர்களின் வாரிசுகள் எளிதாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் இப்படி வாரிசாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படி நுழைந்த வாரிசுகளில் ஒரு சிலர் ஏமாற்றம் அளித்தாலும் மற்றவர்கள் பெரிய அளவில் சாதனைகளை செய்திருக்கின்றனர். முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். திறமையற்ற சிலர் ஓரிரு படங்களில் காணாமலும் போய் விடுகின்றனர். வாரிசாக இருந்தாலும், ரசிகர்கள் அங்கீகரித்தால் மட்டுமே திரை பயணத்தை வெற்றிக்கரமாக தொடர முடியும்.

- Advertisement -

சிவாஜி மகன் பிரபு, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், சத்யராஜ் மகன் சிபிராஜ், நடிகர் சிவக்குமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், முரளி மகன் அதர்வா, மேனகா மகள் கீர்த்தி ஷெட்டி, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன், நாகேஷ் மகன் ஆனந்தபாபு என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

இதில் விஜய் தான் இன்று தமிழ் சினிமாவில் டாப் லெவலில் நெம்பர் 1 பொசிஷனில் இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவராகவும் இருக்கிறார். சூர்யா, கார்த்தி போன்றவர்கள் முன்னணி நாயகர்களாக இருக்கின்றனர். மற்றவர்கள் சராசரி நடிகர்களாக இருக்கின்றனர். வெற்றி, தோல்வி படங்கள் என மாறி மாறி தந்து வருகின்றனர்.

- Advertisement -

நடிகர் சிவக்குமார், எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க ஆரம்பித்து பிறகு ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்து விஜய் போன்றவர்களுடன் நடித்த 3 தலைமுறை கண்ட மூத்த நடிகராக இருக்கிறார். அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் முன்னணி நடிகர்களாக நடித்து வருகின்றனர். சூர்யாவின் மனைவி, சிவக்குமாரின் மூத்த மருமகள் ஜோதிகாவும் நெம்பர் 1 நடிகையாக தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் மகள், சூர்யா கார்த்தி ஆகியோரின் சகோதரி பிருந்தா இதுவரை சினிமாவில் நடிக்கவில்லை. நல்ல அழகுள்ள அவர் சினிமாவில் நடிக்காதது ஏன் என்று பலருக்கும் கேள்வி இருந்து வந்தது. அப்பா, சகோதரர்கள், அண்ணி என 4 பேர் சினிமாத்துறையில் இருந்த போது அவர் ஏன் நடிக்கவில்லை என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், அவரை தேடி வந்த சினிமா வாய்ப்பை, அவரே வேண்டாம் என மறுத்து நிராகரித்த தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்