சுப்ரமணியபுரம் என்ற படம் மூலம் இயக்குனராக நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் என்ற படத்தில் நடித்தார். இந்த 2 படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்தது.
சசிக்குமா் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே சசிக்குமார், சமுத்திரக்கனிக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனை படங்களாக அமைந்தன.
நடிகர் சசிக்குமார் இப்போது டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இலங்கை அகதி தம்பதி சென்னையில் வந்து குடியேறுவதும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவராக சசிக்குமார், சிம்ரனின் கணவராக சசிக்குமார் நடித்திருக்கிறார். வரும் மே 1ம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்த அறிமுக விழாவில் பேசிய நடிகர் சசிக்குமார், நடிகை சிம்ரன் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்று பலரும் என்னிடம் ஆச்சரியமாக கேட்கின்றனர். ஏன் நான் சிம்ரனுடன் நடிக்க கூடதா அந்த தகுதி எனக்கில்லையா என்று கேட்டிருந்தார். இதற்கு நடிகை சிம்ரனும், சினிமாவில் ஜூனியர் சீனியர் பேதம் எல்லாம் பார்க்கக் கூடாது என்றும் விளக்கம் தந்திருந்தார்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, இந்த விஷயத்தில் நடிகர் சசிக்குமார் பேசியது எதுக்காக இவர் இப்படி எல்லாம் பேசறார் என்றுதான் நமக்கு தோணியது. நானெல்லாம் சிம்ரன் கூட நடிக்க கூடாதா என்று சொல்கிறார். அவரை நடிக்க வேண்டாம் என்று யார் சொன்னது? யாருமே அப்படி சொல்லலையே?
அதுவும் சிம்ரன் கூட நடிப்பது என்பது அவ்வளவு பெரிய விஷயமா? நிலாவை பிடித்து பூமிக்கு கொண்டு வர்ற விஷயமா? சிம்ரன் சினிமாவில் ஒரு மார்க்கெட் போன நடிகை. அவருடன் நடிப்பதில் இவருக்கு என்ன பெருமை, நானெல்லாம் நடிக்க கூடாதா என்று ரொம்ப தான் கவலைப்படறார். சசிக்குமாரும் ஒரு நல்ல லெவலில் இருக்கும் நடிகர்தானே என்று வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.





