- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கலுக்கு ரிலீசாகும் விடாமுயற்சி... இப்போது பாடல் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து செல்லும் மகிழ்திருமேனி... இருந்தாலும் நம்ம கடலை...

பொங்கலுக்கு ரிலீசாகும் விடாமுயற்சி… இப்போது பாடல் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து செல்லும் மகிழ்திருமேனி… இருந்தாலும் நம்ம கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்தான்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் திரைப்படங்களை இயக்குவதில் மிக முக்கியமானவர் மகிழ்திருமேனி. தடையற தாக்க தடம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் ஆகச்சிறந்த படங்களாக வெளிவந்தன. கடைசியாக உதயநிதியை வைத்து அவர் கலகத் தலைவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

அதுவும் வசூல் ரீதியாக பெரிய சாதனையை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. இப்படியான சூழலில் தான் தற்போது அவர் அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருந்தது.

 

படப்பிடிப்பு தாமதம், பிற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததில் தாமதம், இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையேயான மனக்கசப்பு என சர்ச்சைகள் சுற்றி சுற்றி வந்தன. இதன் நடுவே தயாரிப்பு நிறுவனத்திடம் போதுமான நிதி இல்லை என்று கூறப்பட்டது.

 

இதன் காரணமாக சில மாதங்கள் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நேரத்தில் அஜித் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்றார். தற்போது இந்த திரைப்படத்திற்கான பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. முதலில் இந்த திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

 

பிறகு விடாமுயற்சி திரைப்படம் அந்த ரேஸில் முந்திக் கொண்டது. இதற்கான அறிவிப்பை டீசரோடு பட குழு வெளியிட்டது. படத்தில் அர்ஜுன் ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அஜித்திற்கு மனைவியாக நடித்திருக்கிறார் திரிஷா. பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த நிலையில் தற்போது பாடல் ஒன்று மட்டும் மீதம் இருப்பதால் அதற்கான பணிகளில் மகிழ்திருமேனி ஈடுபட்டு வருகிறார். இதற்கான ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது. முடிந்த அளவுக்கு மிகக் குறைந்த காலத்தில் இதற்கான பணிகளை முடித்துவிட்டு படத்திற்கான ரிலீஸ் தேதியில் அனைவரும் தீவிரம் காட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்