தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்கள் என்பது எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் துவங்கி ரஜினி கமல் முதல் விஜய் அஜித் விஜய் என்று இன்றுவரை நீடித்து வருகிறது. இப்போது விஜய்க்கு தமிழ் சினிமாவில் போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜித்குமார்தான். இருவரும் சம காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவருமே போட்டியாளர்கள் என்று கருதப்படுகின்றனர்.
ரசிகர்கள் இதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் நடிக்கும் படங்கள் வசூலில் விமர்சனங்களில் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் ஒரு தரப்பாகவும் அஜித் ரசிகர் ஒரு தரப்பாகவும் இருந்து தங்களது அபிமான நடிகர்களை உயர்த்திப் பிடித்து வருகின்றனர்.ஆனால் உண்மையில் விஜய்க்கு சரியான போட்டியாளர் அஜித் கிடையாது. எந்த விதத்திலும் விஜய்யுடன் அஜித்குமார் போட்டியிட தகுதியற்றவர் என்ற பாணியில் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ. பிஸ்மி கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி இது பற்றி கூறியதாவது, நடிகர் விஜய்யும் நடிகர் அஜீத்குமாரும் சம காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஆனால் நடிகர் விஜயை பொருத்தவரை தொழிலில் அதிக கவனம் கொண்டவர். சினிமாவில் நடிப்பதில் எப்போதுமே ஒரு டிசிப்பிளனை கடைபிடிப்பவர். ஒரு படத்தில் நடித்து முடித்த உடனே அடுத்த படத்தில் கமிட்டாகி விடுவார்.
விஜய் நடிக்கும் படத்தின் பாதி சூட்டிங் நடந்து முடிந்திருக்கும் போதே, அடுத்த படம் குறித்த கதை டிஷ்கஷனில் ஆர்வம் காட்டுவார். ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதுதான் அவரது வழக்கமாக இருக்கிறது. அதே போல் விஜய் சம்பளத்திலும் வசூலிலும் முதல் படிக்கட்டில் இருக்கிறார்.
ஆனால் நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரை சினிமாவில் அவர் ஒரு கட்டத்துக்குப் பிறகு கூடுதல் ஆர்வமோ, அக்கறையோ காட்டுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக அவர் அப்படித்தான் இருந்து வருகிறார். அதற்கு காரணம் சினிமாவில் நிறைய புகழை பார்த்து விட்டோம், நிறைய பணம் சம்பாதித்து விட்டோம் என்ற மனநிலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். அது மட்டும் இன்றி அவருக்கு பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருப்பதால் சினிமாவை இரண்டாம் பட்சமாக நினைக்கிறார் என்றும் சொல்ல முடியும்.
அதனால் நடிகர் அஜித்குமார் படங்களில் நடிப்பதில், சம்பளத்தில், படம் வசூலில் என விஜய் முதல் படிக்கட்டில் இருந்தால் அஜீத்குமார் நான்கு படிக்கட்டுகள் கீழே தான் இருக்கிறார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதனால் நடிகர் விஜய்க்கு போட்டியாளராக அஜித்குமார் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் அஜீத் ரசிகர்களை பொறுத்தவரை விஜய்க்கு போட்டியாளர் அஜித்குமார் என்று கூறி வருகின்றனர். அது சிறிதும் உண்மை இல்லை என்று பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.





