- Advertisement -
Homeபொழுதுபோக்குசுப்ரமணியபுரம் படத்தில் சோமு என்ற அரசியல்வாதி கேரக்டரில் நடித்தவர் அவரா? - ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த...

சுப்ரமணியபுரம் படத்தில் சோமு என்ற அரசியல்வாதி கேரக்டரில் நடித்தவர் அவரா? – ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் சசிக்குமார்!

- Advertisement -

கடந்த 2008ம் ஆண்டில் வெளியான படம் சுப்ரமணியபுரம். நடிகர் சசிக்குமார் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமான படம். நாயகனாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெய் சமுத்திரக்கனி கஞ்சா கருப்பு ஸ்வாதி முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சசிக்குமாரின் முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் அரசியல்வாதிக்கு போட்டியாக இருக்கும் மற்றொரு அரசியல்வாதியை ஊருக்குள் ரவுடித்தனம் செய்துக்கொண்டு இருக்கும் ஜெய் சசிக்குமார் கஞ்சா கருப்பு கொலை செய்வதுதான் கதை. அதனால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள்தான் படம். இதில் சமுத்திரக்கனிதான் பிரதான வில்லனாக கடைசியில் இருப்பார்.

- Advertisement -

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டில் வெளியான படம் பருத்தி வீரன். இந்த படத்தில் முதல் பாடல் காட்சியில் மதுரை மலைகோணார் சந்தனம் குறித்த பாடல் வரிகள் வரும்போது அந்த சந்தன கடையை காட்டுவார்கள். இந்த பாடல் காட்சியில் வரும் மலைகோணார் சந்தன கடையின் உரிமையாளர் வேறு யாருமல்ல, நடிகர் சசிக்குமாரின் சித்தப்பா தான், படத்தில் வருவது அவரது கடைதான் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்தான், நடிகர் சசிக்குமார் முதலில் இயக்கிய நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் சோமு என்ற பெயரில் அரசியல்வாதி கேரக்டரில் நடிகர் சமுத்திரக்கனியின் அண்ணனாக நடித்திருப்பார். இவரை மையப்படுத்தி தான் படத்தின் கதையே உருவாகி இருக்கும். அதாவது தனது சித்தப்பாவை தனது படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் நடிகர் சசிக்குமார்.

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரின் சித்தப்பா சோமு கேரக்டரில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என்னுடைய அண்ணன் மகன்தான் நடிகர் சசிக்குமார். பருத்திவீரன் படத்தில் வந்த அந்த பாடல் காட்சியை பார்த்துவிட்டு, நீ டைரக்ட் செய்கிற படத்தில் ஒரு காட்சியில் நான் வர வேண்டும் என்று ஆசையாக கேட்டேன்.

அதன்பிறகு சுப்ரமணியபுரம் படத்தில் என்னை மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க வைத்தார். என்னை சுத்தியே கதை ஓடற மாதிரி அதை அமைச்சிருப்பார். படம் வந்த பிறகுதான் எனக்கே அந்த விஷயமே தெரிஞ்சது, என்னைய வெச்சே ஒரு கதையே உருவாக்கி இருக்கிறாரே என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டேன் என்று, அவர் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்