- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவை காப்பாற்ற நடிகர் சத்யராஜ் சொன்ன சூப்பர் ஐடியா - ஆனா இப்ப எல்லாமே...

தமிழ் சினிமாவை காப்பாற்ற நடிகர் சத்யராஜ் சொன்ன சூப்பர் ஐடியா – ஆனா இப்ப எல்லாமே தலைகீழா மாறிப்போச்சே தலைவரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில், சீனியர் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் புரட்சி தமிழன் சத்யராஜ். சட்டம் என் கையில் என்ற படத்தில்தான் சத்யராஜ் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டினார். ஒரு கட்டத்துக்கு பிறகு அவரை பாலைவன ரோஜாக்கள் படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் மணிவண்ணன்.

பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள், சத்யராஜை பலரும் விரும்பும் ஒரு நடிகராக மாற்றியது. தொடர்ந்து ஹீரோவாக நடித்த சத்யராஜ் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதுவும் சத்யராஜ் – கவுண்டமணி கூட்டணி, தமிழ் சினிமா ரசிகர்களை குதூகலம் அடையச் செய்தது. இதனால் பல படங்களில் சத்யராஜூடன் நடித்தவர் கவுண்டமணி தான்.

- Advertisement -

சத்யராஜை பொருத்தவரை மூட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். கடவுள் மறுப்பாளர். ஆனால் பல படங்களில் அவர் நெற்றியில் திருநீறு பூசி தான் நடித்திருப்பார். கடவுள் நம்பிக்கை உள்ளவராக பேசுவார். இளம் வயதில் திருப்பதிக்கு பலமுறை மொட்டை அடித்தவர் சத்யராஜ். ஆனால் அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றியவர் இயக்குநர் மணிவண்ணன்தான்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சத்யராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இந்த இரண்டு விஷயங்களும்தான் தமிழ் திரைப்படங்களின் தரத்தை குறைத்து, மசாலா படங்களாகவே இன்னும் வைத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார். சத்யராஜ் குறிப்பிடும் இரண்டு விஷயங்கள் என்னவெனில் ஒன்று படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், மற்றொன்று சண்டை காட்சிகள்.

- Advertisement -

இந்த சண்டை காட்சிகள் எடுப்பதற்காக முன்னாலும் பின்னாலும் சில காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல் சண்டை காட்சிகளுக்காகவும் முன்னாலும் பின்னாலும் சில காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால், இரண்டரை மணி நேர படத்தில் பல நிமிடங்களை இந்தமாதிரியான விஷயங்களே எடுத்துக்கொள்கின்றன.

இதனால் சொல்ல வந்த கதையை, அதற்கேற்ப திரைக்கதையை கொண்டு செல்வதில் இயக்குநர்களுக்கு பலத்த நெருக்கடி ஏற்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களை தவிர்த்தாலே படங்கள், மிக சிறப்பானதாக மாறிவிடும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இப்போதைய படங்களில் பாடல் காட்சிகளுக்கு கூட நேரம் ஒதுக்காமல், படம் முழுக்க சண்டை, வன்முறை, வெட்டு குத்து காட்சிகளாக மாறிவிட்டதால், சத்யராஜ் சொன்ன இந்த ஐடியா, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை போன்றதாக தான் இருக்கிறது என்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்