- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிக்க மாட்டேன்… ஒதுங்கிகொண்ட மலையாள நடிகர் மோகன்லால், அந்த கேரக்டருக்கு உடனே ஓகே சொன்ன...

நான் நடிக்க மாட்டேன்… ஒதுங்கிகொண்ட மலையாள நடிகர் மோகன்லால், அந்த கேரக்டருக்கு உடனே ஓகே சொன்ன நடிகர் சத்யராஜ் – ஆனா இதுக்கு அவர் சரிப்பட்டு வருவாரா?

- Advertisement -

மலையாள சினிமாவில் ஒரு சிறந்த நட்சத்திர கலைஞராக இருப்பவர் நடிகர் மோகன்லால். 45 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறந்த நடிகராக அவர் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு நடிகர் மோகன்லாலுக்கு தாதே சாகிப் பால்கே விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மோகன்லால் தமிழில் இருவர் உன்னைப் போல் ஒருவன் ஜெயிலர் ஜில்லா சிறைச்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு அப்பா கேரக்டரில் நடிகர் மோகன்லால் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே ஜெய்பீம் வேட்டையன் படங்களை இயக்கிய இயக்குனர் தசெ ஞானவேல் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி – ஜீவஜோதியை வாழ்க்கை கதையாக படமாக எடுக்க உள்ளார். இந்த படத்தில் அண்ணாச்சி கேரக்டரில் நடிக்க நடிகர் மோகன்லாலிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அப்படிப்பட்ட கேரக்டரில் நான் நடிக்க முடியாது என்று மோகன்லால் மறுத்து விட்டார்.

ஏனெனில் சரவணபவன் ஓட்டல் தொழிலில் சிறந்து விளங்கிய ராஜகோபால் அண்ணாச்சி ஒரு கட்டத்தில் ஜோதிட நம்பிக்கையிலும் பெண்ணாசை காரணமாகவும் ஜீவஜோதி என்ற இளம்பெண் மீது ஆசைப்பட்டு அவரது கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு பெரிய அளவில் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

- Advertisement -

இப்போது அண்ணாச்சி கதையை தான் இயக்குனர் தசெ ஞானவேல் படமாக உருவாக்க உள்ளார். இந்த கதையில் அண்ணாச்சி கேரக்டரில் நடிக்க மோகன்லால் மறுத்து விட்டார். இப்போது அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சத்யராஜ் முன்வந்துள்ளார். சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியாக நடிகர் சத்யராஜ் நடிப்பது உறுதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் நடிகர் சத்யராஜ் 6.2 அங்கும் உயரம் கொண்டவர். அண்ணாச்சி குள்ளமான உருவம் கொண்டவர். அவரது கேரக்டரில் இவர் நடித்தால் அது எடுபடுமா என்பதே கேள்வியாக உள்ளது. மேலும் பெரியார் கேரக்டரில் சத்யராஜ் நடித்தார் என்றாலும் பெரியாரின் உயரம் குறித்து பலரும் பார்த்தது இல்லை. ஆனால் அண்ணாச்சி உயரம் குறைவு என்பது அனைவருக்குமே தெரியும். அவரது கேரக்டரில் உயரமாக உள்ள சத்யராஜ் நடிப்பது எப்படி பொருத்தமாக இருக்கும் என்ற விமர்சனம் இப்போது எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்