நடிகை ஷகிலா, தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடந்த 1990களில் அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அவரது படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் போட்டி போடுவர்.
ஏனெனில் அவரது படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் வசூல் அள்ளிவிடலாம். அந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து காணப்படும். பெரிய ஹீரோக்கள் ஓடிய தியேட்டர்களில் கூட காலை 10 மணி, இரவு 10 மணி சிறப்பு காட்சிகளாக ஷகிலா நடித்த படங்கள் திரையிடப்பட்டன.
ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத காலகட்டத்தில் கவர்ச்சி படங்களை காண விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு ஷகிலாதான் தாராளமான கவர்ச்சி காட்டும் நடிகையாக இருந்தார். அதனால் ரசிகர்களின் மத்தியில் பெரிய அபிமானம் அவர் மீது இருந்தது. இதனால் ஷகிலா மார்க்கெட் எகிறி காணப்பட்ட காலகட்டமாக அது இருந்தது.
குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு, ஷகிலா படங்களுக்கான கூட்டம் குறைந்து அவர் மார்க்கெட் சரிந்தது. இந்நிலையில் யூடியூப் ஒன்றை நடத்தி நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்து வருகிறார். இதற்கிடையே நேற்று அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் அவரை தாக்கியதாகவும், அவருடன் இருந்த வக்கீலையும் தாக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதால் கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் பரவியது.
இதுகுறித்து ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என் சொந்த அம்மா பற்றியும், என் அக்கா பற்றியும் ஷகிலா அத்தை மிக கேவலமாக, தரக்குறைவாக பேசியதால்தான் சண்டையே வந்தது. ஷகிலா குடிப்பழக்கம் உள்ளவர். தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிக்கிறார்.
அவர் தினமும் என்னை அடித்ததால்தான் ஆத்திரத்தில் நானும் அவரை அடித்தேன். அடிக்க விடாமல் தலைமுடியை பிடித்துக்கொண்டதால்தான் என் தாய், வக்கீலின் கையை கடித்தார், என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





