நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தவர். கார்த்திக் அம்பிகா நடித்த கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தை தயாரித்த சரத்குமார், அதில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். அதே போல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய புரியாத புதிர் படத்திலும் சிஐடி போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்திருந்தார்.
நடிகர் சரத்குமாரை புலன்விசாரணை படத்தில் டாக்டர் கேரக்டரில் வில்லனாக நடித்த வைத்தவர் நடிகர் விஜயகாந்த் தான். அவர்தான் படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணியிடம், அந்த பம்பாய் டாக்டர் கேரக்டரில் சரத்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அந்த வாய்ப்பை வாங்கி தந்திருக்கிறார்.
பிறகு தமிழில் பல படங்களில் நடித்த சரத்குமார், கடந்த 1990களில் முன்னணி நடிகராக மாறினார். அவர் நடித்த பெரிய கவுண்டர் பொண்ணு சேரன் பாண்டியன் சூரியன் நாட்டாமை சூரியவம்சம் என பல படங்கள் சரத்குமாருக்கு வெற்றிப் படங்களாக இருந்தன. தொடர்ந்து சரத்குமார் குணச்சித்திர வேடங்களில் இப்போதும் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் பெரிய பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் சரத்குமார் நடிப்பு அழுத்தமாக நடித்திருந்தார். அடுத்து போர்த்தொழில் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது நடிகர் சரத்குமார் 3 பிஹெச்கே என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சூரியவம்சம் மூவேந்தர் படங்களுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் தேவயானி சரத்குமார் ஜோடி இந்த படத்தில் இணைந்திருக்கிறது. சித்தார்த் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். வாடகை வீடு குறித்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் 3 பிஹெச்கே படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, நானும் தேவயானியும் 28 வருஷங்களுக்கு அப்புறம் இந்த படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கிறோம். இந்த படம் நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல மெசேஜ் சொல்கிற படமாக இருக்கும். நான் நடிச்ச ஐயா நாட்டாமை சூரியவம்சம் ஆகிய படங்கள் 2ம் பாகமாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.





