- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பமே சரியில்லையே? கேப்டன் மில்லர் பட விழாவில் நடந்த விவகாரம், வைரலாகும் வீடியோ - தனுஷூக்கு...

ஆரம்பமே சரியில்லையே? கேப்டன் மில்லர் பட விழாவில் நடந்த விவகாரம், வைரலாகும் வீடியோ – தனுஷூக்கு சோதனை மேல் சோதனையா?

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் மகன், டைரக்டர் செல்வராகவனின் தம்பி போன்ற அடையாளங்களை காட்டிலும், நடிகர் தனுஷ் என்பதே அவரது முக்கிய அடையாளமாக இருக்கிறது.

துவக்கத்தில் இருந்தே தன்னை செதுக்கி செதுக்கி உருவாக்கிக்கொண்ட தனுஷூக்கு புதிய களத்தை ஏற்படுத்தி தந்தவர் டைரக்டர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்களால் தனுஷின் சினிமா பயணத்தையே மாற்றி அமைத்தவர் வெற்றிமாறன்.

- Advertisement -

இப்போது 30 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற அளவுக்கு சிகரம் தொட்டுள்ள தனுஷின் அடுத்த படம் கேப்டன் மில்லர் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அயலான், கேப்டன் மில்லர் இரண்டும் நேருக்கு நேர் மோத உள்ள நிலையில், ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படமும் களத்தில் நிற்கிறது.

இந்நிலையில், சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பிரமோ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தனுஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர், படக்குழுவினர் விழாவில் கலந்துக்கொண்டனர். தனுஷ் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- Advertisement -

கேப்டன் மில்லர் படத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஐஸ்வர்யாவும் நடித்திருக்கிறார். மன்சூர் அலிகானின் சரக்கு படம் விழாவில், நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இவர் கழுத்தில்தான் கூல் சுரேஷ் பூ மாலை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார், அவர்தான் இந்த ஐஸ்வர்யா. கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருப்பதால், அவரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்தபின் மேடையில் இருந்த தனுஷை பார்க்க அவரது ரசிகர்கள் மேடை அருகே முண்டியடித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் மேடையில் இருந்த ஐஸ்வர்யாவை பாலியல் துன்புறுத்தல் செய்து சீண்டியுள்ளார். அவரை பிடித்து ஐஸ்வர்யா அடிக்கும் காட்சி வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த ரசிகர் அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடுவது வரை வீடியோவில் வருகிறது. தனுஷ் படக்குழு, விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்