- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னோட்டத்திலேயே இப்படி மிரட்டீட்டாங்களே, வெளியானது கேம் சேஞ்சர் டிரெய்லர் - ராம்சரண், எஸ்ஜே சூர்யா அதிரடியை...

முன்னோட்டத்திலேயே இப்படி மிரட்டீட்டாங்களே, வெளியானது கேம் சேஞ்சர் டிரெய்லர் – ராம்சரண், எஸ்ஜே சூர்யா அதிரடியை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிரடியான பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். ஜென்டில்மேன் படம் துவங்கி இந்தியன் 2 படம் வரை பல பிரமாண்டமான வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களை ஈர்த்தவர். இந்தியன் 2 தவிர அவரது எல்லா படங்களுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் கேம் சேஞ்சர் என்ற படம் உருவாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள ராம்சரண் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளார். அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் பொங்கல் வெளியீடாக தமிழகத்தில் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்ற ஜருகண்டி, ரா மச்சான் ரா, லைரானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் லைரானா பாடல் இணையத்தில் 4 கோடி பார்வையாளர்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி ஸ்ரீகாந்த் சமுத்திரகனி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

- Advertisement -

வரும் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடிகர் ராம்சரணுக்கு 250 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகளில் இதுதான் மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற 7ம் தேதி சென்னையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கேம்சேஞ்சர் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் உள்ளனர். குறிப்பாக ராம்சரண் எஸ்.ஜே சூர்யாவின் அதிரடியான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கேம் சேஞ்சர் டிரெய்லரை காண இங்கு கிளிக் செய்யவும்:https://www.youtube.com/watch?v=zHiKFSBO_JE

- Advertisement -

சற்று முன்