- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் டைரக்டர் ஷங்கர் செய்கிற அந்த விஷயம், இதுல பினிஷிங் சரியா வருமான்னு...

இந்தியன் 2 படத்தில் டைரக்டர் ஷங்கர் செய்கிற அந்த விஷயம், இதுல பினிஷிங் சரியா வருமான்னு தெரியலையே – உலக நாயகனை மட்டுமே நம்பறாரோ…

- Advertisement -

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இந்தியன். லஞ்சம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய ஷங்கர் படம். அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை பார்த்த ஒரு 70 வயது முதியவரின் கோபம்தான் இந்த படத்தின் மையக்கரு. இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் வேற லெவலில் நடித்திருப்பார்.

இதில் பாட்டி வேடத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், அஜய் ரத்னம், நெடுமுடி வேணு, நிழல்கள் ரவி, மனோரமா என பலரது கேரக்டர்களும் பேசும்படியாக இருந்தது. குறிப்பாக இந்தியன் தாத்தாவின் மகனாகவும் கமல் இளம் வயது தோற்றத்தில் நடித்திருப்பார். இறுதியில் மகனையும் கத்தியால் குத்திக் கொல்வார் இந்தியன் தாத்தா கமல்.

- Advertisement -

இந்தியன் படத்தின் 2ம் பாகம் கடந்த பல மாதங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியன் 3 பாகத்தையும் ஷங்கர் எடுத்துவிட்டார். அதனால் ஒரே படப்பிடிப்பில் இந்தியன் 2, 3 பாகங்களை முடித்துள்ள அவர் முதலில் 2ம் பாகத்தையும், அடுத்து 3ம் பாகத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார். கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த வாரத்தில் வரும் வியாழக்கிழமை வரை இந்தியன் 2 படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் கமல் பங்கேற்கும் காட்சிகள் படம்பிடிக்கப்பட உள்ளது. இரவு 10 மணி முதல், காலை 4 மணி வரை தினமும் நடக்கும் படப்பிடிப்பு ஒரு வாரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்புகளில் கமல் நடிக்கும் காட்சிகளை மட்டுமே இயக்குநர் ஷங்கர் இருந்து டைரக்ட் செய்கிறார். மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை அவரது உதவி இயக்குநர் அறிவழகன் என்பவர் டைரக்ட் செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கமலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஷங்கர், மற்ற நடிகர்களை இயக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பாடல் காட்சிகளில் டான்ஸ் மாஸ்டர், சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் என டைரக்ட் பணியை எடுத்துக்கொள்கின்றனர். இதில் ஹீரோ கமல் நடிக்கும் காட்சிகளை மட்டுமே டைரக்ட் செய்ய இயக்குநர் ஷங்கர் விரும்பும் பட்சத்தில், கமல் நடிக்கும் காட்சிகள் மட்டுமே சிறப்பாக வந்தால் போதும் என இயக்குநர் கருதுகிறார் என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் இப்படி எடுக்கும் அந்த படம் யாருடைய சாயலில், ஸ்டைலில் இருக்கும் என்பதே இப்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.

- Advertisement -

சற்று முன்