- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, பொங்கல் ரேஸில் விக்ரம் அந்த படமும் இணைகிறதா? வாடிவாசலை திறந்து விட்ட மாதிரி இத்தனை...

என்னது, பொங்கல் ரேஸில் விக்ரம் அந்த படமும் இணைகிறதா? வாடிவாசலை திறந்து விட்ட மாதிரி இத்தனை படங்களா… என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகராக அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுவர் நடிகர் கமல்ஹாசன். அவர் ஏற்று நடிக்கும் எந்த கேரக்டராக இருந்தாலும் அவரை போன்ற ஒரு நடிப்பை யாராலும் வெளிப்படுத்த முடியாது என்பதே உண்மை. அவர் சினிமாவில் நடிப்பில் செய்த சாதனைகளின் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது

தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையில் கமல்ஹாசன் மீது பலவிதமான சர்ச்சையான கருத்துகள் இருந்தாலும் ஒரு திரைக்கலைஞனாக கமல்ஹாசன் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர். அவரை போலவே நடிப்புக்கான மெனக்கெடும் இன்னொரு கலைஞனும் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்றால் அது நடிகர் விக்ரம்தான்.

சேது படம் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்ற சியான் விக்ரம் அந்நியன் ஐ சாமி காசி அருள் ஜெமினி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் தங்கலான். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. இனி வீர தீர சூரன் படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் அவரது சொந்த தயாரிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் துவக்கினார். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாததால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

அதன் பிறகு துருவ நட்சத்திரம் படத்தின் கதையை ரஜினியிடம் கௌதம மேனன் கூறினார். கதை பிடித்ததாக கூறிய ரஜினி பிறகு அவரும் நடிக்கவில்லை. இறுதியாக இந்த கதையை கேட்ட நடிகர் சியான் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நிதி பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைப்பட்டது. எனினும் பல தடைகளை கடந்து இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பார் கௌதம் மேனனுக்கு பல கடன் பிரச்னைகள் இருப்பதால் துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நீடித்தது. இந்த சூழ்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் ஏற்கனவே 10 படங்கள் வரும் நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் தான் குழம்பி போயுள்ளனர்.

சற்று முன்