- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெண்டில்மேன் காதலன் இந்தியன்… தனது படங்களில் அந்த சென்டிமென்ட் பார்த்தாரா இயக்குனர் ஷங்கர்? - அவரே...

ஜெண்டில்மேன் காதலன் இந்தியன்… தனது படங்களில் அந்த சென்டிமென்ட் பார்த்தாரா இயக்குனர் ஷங்கர்? – அவரே சொன்ன அதிரடி விளக்கம்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் ஆரம்பத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பிறகு கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் ஜெண்டில் மேன் படத்தை முதன் முறையாக இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெண்டில் மேன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நடிகர் அர்ஜூன் மதுபாலா வினீத் மனோரமா சரண்ராஜ் கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடிகை கௌதமி பிரபுதேவாவுடன் ஆடியிருந்தார்.

- Advertisement -

ஷங்கர் இயக்கிய படங்களில் முதல் படம் ஜெண்டில் மேன், அடுத்து பிரபுதேவா நக்மா நடிப்பில் காதலன் படம் வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து கமல் நடித்த இந்தியன் படமும் பெரிய ஹிட் படம்தான். அடுத்து முதல்வன், அந்நியன் நண்பன் என ஷங்கர் இயக்கிய படங்கள், அதன் டைட்டில் ன் என்று முடிவடைவது அவரது சென்டிமென்ட் என்று ரசிகர் கருதினர்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கரிடம் கேட்கப்பட்டது. உங்களது படங்களின் டைட்டில் கடைசியில் ன் என்று முடிவடைவது, அது வெற்றிப் படங்களாக அமைய காரணமா, அப்படி ஒரு சென்டிமென்ட் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர் இல்லை, அதெல்லாம் இல்லை. அது தானாக நடந்த ஒரு விஷயம்தான். முதல் படம் ஜெண்டில் மேன் அடுத்ததா காதலன் 3வது படம் இந்தியன் என்று வந்தவுடன் எல்லோரும் ன் சென்டிமென்ட் நான் பார்ப்பதாக கூறினர். அப்படி எல்லாம் கிடையவே கிடையாது.

இதை உடைக்கணும் என்றே நிறைய டைட்டில் வெச்சிருக்கேன். அப்படி பார்த்தால் ஜீன்ஸ் படத்தை ஜீஸ் என்றுதான் வைத்திருக்கணும் என்று இயக்குனர் ஷங்கர் ஜாலியாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் பெரிய வெற்றியை பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்