- Advertisement -
Homeபொழுதுபோக்கு28 ஆண்டுகளுக்கு முன் என்னடா, எனக்கு போட்டியா? - ரஜினிகாந்தை பார்த்து கேட்ட அந்த...

28 ஆண்டுகளுக்கு முன் என்னடா, எனக்கு போட்டியா? – ரஜினிகாந்தை பார்த்து கேட்ட அந்த பிரபல நடிகர் – அதற்கு ரஜினி சொன்ன பதில் வீடியோ வைரல்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இன்று இருக்கிறார். 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் அவர் உயரத்தில் பறந்துக்கொண்டே இருக்கிறார். பைரவி படத்தில் நடித்த போதே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியவர் தயாரிப்பாளர், இயக்குநர் கலைஞானம். அதுவே ரஜினிக்கு நிலைத்துப் போனது.

இப்போது ரஜினியை போல, தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட ஒரு நடிகராக புகழில் இருப்பவர் நடிகர் விஜய். அவருக்கு ஏற்கனவே இளைய தளபதி என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கி விட்டனர். ஒரு கட்டத்துக்கு பிறகு இளைய என்பது தவிர்க்கப்பட்டு, தளபதி விஜய் என்ற பட்டப்பெயருடன் அவர் இருந்து வருகிறார். வாரிசு பட விழாவில் விஜய் சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேச, அது ரஜினி ரசிகர்களை டென்சன்படுத்தி, இரு தரப்பு ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியது.

- Advertisement -

லியோ பட வெளியீட்டு விழாவிலேயே, சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர்தான். அது ரஜினிகாந்த் தான். நான் உங்கள் தளபதியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் ஆணையிடுங்கள். அதை தளபதியாக செய்துவிட்டு போகிறேன் என்று அப்போதே கூறிவிட்டார்.

இந்த சூழலில், நேற்று லால் சலாம் விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் காக்கா கழுகு கதை விஜயை நினைத்து சொல்லவில்லை. சமூக ஊடகங்களில் அது தவறாக காட்டப்பட்டு விட்டது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவருக்கு நான் போட்டியாகவோ, எனக்கு அவர் போட்டியாகவோ நினைத்தால் அது மரியாதை, கவுரவம் அல்ல, என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரஜினி இப்படி பேசிய பிறகு, 28 ஆண்டுகளுக்கு முன், கடந்த 1995ல் இதே போன்ற ஒரு பஞ்சாயத்தில் ரஜினி மேடையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்போதே புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி, தன்னை போலவே தாடி வெச்சிருந்த ரஜினியை பார்த்து அப்படி கேட்டு இருக்கிறார். அதுபற்றி ரஜினியே மேடையில் பதில் அளித்திருக்கிறார்.

கடந்த 1995ம் ஆண்டில் நடந்த அந்த விழாவில், மேடையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி சார் என் தாடியை பார்த்துட்டு, என்னடா எனக்கு போட்டியா என்று கேட்டார். நான் யாருக்கும் போட்டியில்லே. சாதாரண ஆளு. என்னோட வழியில நான் போயிட்டு இருக்கேன். யார் வழிக்கும் நான் போக மாட்டேன். என் வழிக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிடவும் மாட்டேன், என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்