- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகையும் அதே முடிவை எடுத்திருக்கிறாரே? - ஏம்பா அதுல உள்குத்து...

நடிகை சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகையும் அதே முடிவை எடுத்திருக்கிறாரே? – ஏம்பா அதுல உள்குத்து விவகாரம் எதுவும் இருக்குதா?

- Advertisement -

நடிகை சமந்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே இந்திய சினிமா ரசிகர்களுக்கே பிடித்தமான ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சமந்தாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகளவில் வருகிறது.

எனினும் அவருக்கு மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். ஏற்கனவே நடிக்க சம்மதித்து கமிட் ஆன படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதில் குஷி, யசோதா போன்ற சில படங்கள் ரிலீசாகி விட்டன. இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகை சமந்தாவை பொருத்த வரை அவரது திருமண வாழ்க்கை மிகவும் மோசமான நிகழ்வாக போய் விட்டது. எனினும் நாக சைதன்யா குறித்து பேசவே விரும்பாத அவர், தனது கவனத்தை சினிமா சார்ந்தும், உடல் ஆரோக்கியம், யோகா, தியானம் சார்ந்தும், தன்னம்பிக்கை, பெண்களுக்கான ஆடைகள் சார்ந்தும் பல்வேறு கருத்துகளை, சிந்தனைகளை சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொண்டு வருகிறார். தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா சென்னை ஸ்டோரிஸ் என்ற ஆங்கில படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததால், மயோசிடிஸ் நோய் தாக்கம் இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் நடிப்பது என்று முடிவு செய்திருந்தார்.

- Advertisement -

டைரக்டர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரிஸ் படத்தில் சமந்தா ஜோடியாக விவேக் கல்ரா நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என நடிகை சமந்தா விலகி விட்டார். அதன்பிறகு இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹாலிவுட் படம் என்பதால் அவரும் உடனே ஒத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது திடீரென சென்னை ஸ்டோரிஸ் படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசனும் விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. முதலில் சமந்தா, அதன்பிறகு ஸ்ருதிஹாசன் என இருவருமே அந்த படத்தில் இருந்து விலக என்ன காரணம் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆங்கில படம் என்பதால் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மறுத்து அவர்கள் வெளியேறி இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்