- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அந்த பிரபல இயக்குனரா?...

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அந்த பிரபல இயக்குனரா? என்னய்யா சொல்றீங்க என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ஆர்யா சந்தானம் நடிப்பில் வெளியான படம் பாஸ் என்கிற பாஸ்கரன் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாகும். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆர்யாவின் அண்ணனாக சுப்பு பஞ்சு அம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன், சித்ரா லட்சுமணன் விஜயலட்சுமி ஷகிலா மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் தல தளபதி என்ற பெயரில் சலூன் கடை நடத்தும் உரிமையாளராக நடிகர் சந்தானம் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானம் டுட்டோரியல் காலேஜூம் நடத்துவார். இதில்தான் நண்பேன்டா என்ற டயலாக் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.

இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ், சிவா மனசுல சக்தி என்ற படத்தை 2ம் பாகமாக இயக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். அதனால் இந்த படத்தை 2ம் பாகமாக எடுக்க அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

ஏனெனில் நடிகர் சந்தானம் இப்போது நாயகனாக நடித்து வருகிறார். ஆர்யாவுடன் அவர் காமெடி ரோலில் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மீண்டும் அதே கேரக்டரில் நடித்தால் மட்டுமே இந்த படம் அதே போன்ற ஒரு வரவேற்பை ரசிகர்களிடம் பெறும் என்ற நிலையில், சந்தானம் கால்ஷீட்தான் இந்த படம் 2ம் பாகமாக உருவாக வழிவகுக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எம் ராஜேஷ் கூறியதாவது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணன் கேரக்டரில் விஜயலட்சுமியின் கணவராக சுப்பு பஞ்சு நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது கேரக்டர் மிகவும் ரசிக்கப்பட்டது.

ஆனால் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இயக்குனர் மற்றும் நடிகர் சேரன்தான். முதலில் அவரிடம்தான் இந்த கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது சரியாக அமையாததால் அந்த கேரக்டரில் சேரன் நடிக்க முடியவில்லை. பிறகு சுப்பு பஞ்சு அந்த கேரக்டரில் நடித்தார் என்று இயக்குனர் எம் ராஜேஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்