- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 திரைப்படத்திற்குப் பிறகு இது நடக்கவே இல்லை... மனம் வருந்தி பேசிய கமல்ஹாசன் மகள்... நொந்து...

3 திரைப்படத்திற்குப் பிறகு இது நடக்கவே இல்லை… மனம் வருந்தி பேசிய கமல்ஹாசன் மகள்… நொந்து போன ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி புகழ் சேர்த்து வருகிறார். நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் பாடல் ஆசிரியர் பாடகர் என பன்முகத்தன்மை பெற்று அவர் விளங்குகிறார். இவரது மகளான ஸ்ருதிஹாசனும் திரைத்துறையில் நடிகையாக வலம் வருகிறார்.

 

- Advertisement -

இவருக்கு தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது ஏழாம் அறிவு. சூர்யா கதாநாயகனாக நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. அதேபோல் ஸ்ருதிஹாசனை மையப்படுத்திய இதன் கதை நகரும் வகையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஏழாம் அறிவு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

 

- Advertisement -

பிறகு அவர் தனுசுடன் இணைந்து 3 திரைப்படத்தில் நடித்தார். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமானார். காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அனிருத்திற்கும் இந்த திரைப்படம் அறிமுக படமாக அமைந்தது.

 

ஏற்கனவே அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஒய் திஷ் கொலவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டு அடித்தது. தமிழ்நாட்டைக் கடந்து உலகம் எங்கும் இந்த பாடல் எதிரொலிக்க, தனுசையும் அனிருத்தையும் மக்கள் கொண்டாடினார்கள். இப்படி பலத்த எதிர்பார்ப்பு படம் மீது இருக்க, அதனை அந்த சமயத்தில் அந்த திரைப்படம் பூர்த்தி செய்ய தவறியது.

 

குறிப்பாக தனுஷ் இறப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருப்பதை பலரும் விரும்பவில்லை. இதனால் அந்த நேரத்தில் 3 திரைப்படம் சரியாக செல்லவில்லை. ஆனால் தற்போது அந்த திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள். அதில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு உதாரணம் சமீபத்தில் அந்த திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

 

இந்த நிலையில் அந்த திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துக்களை சுருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அந்த திரைப்படம் வெளியாகி 10 வருடங்களுக்கு பிறகு ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும். உண்மையை சொல்லப்போனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக நான் எந்த ஒரு திரைப்படத்திலும் புக்காகவில்லை. யாரும் என்னிடம் கதை கூற வரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்