- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அமைதியான ஆளாக மாறி விட்டேனா …? - தக்லைஃப் பட பிரமோ நிகழ்ச்சியில்...

நான் அமைதியான ஆளாக மாறி விட்டேனா …? – தக்லைஃப் பட பிரமோ நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் சிலம்பரசன்!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு, தனது தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நடிப்பு டான்ஸ் என அப்போதே பட்டைய கிளப்பியவர். அந்த சிறு வயதிலேயே லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். காதல் அழிவதில்லை படம் மூலம் நாயகனாக அறிமுகமான அவர் விரைவில் தனது 49வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆரம்பத்தில் சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, சில காதல் விவகாரங்களில் சிக்கினார். நயன்தாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்ருதிஹாசன் வரலட்சுமி சரத்குமார் போன்றவர்களுடன் காதல் வயப்பட்டதாக தகவல்கள் பரவியது. இன்னும் சில நடிகைகளுடனும் அவர் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் கடைசியில் எதுவுமே ஊர்ஜிதமாகவில்லை.

- Advertisement -

இதற்கிடையே இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் நடிகர் சிம்பு நல்ல இணக்கமான சூழலில் படப்பிடிப்பு தளங்களில் இல்லை என்ற புகார்களும் நிறைய வந்தன. கால்ஷீட் தந்துவிட்டு ஷூட்டிங்குக்கு வருவதில்லை, அப்படியே வந்தாலும் மிக தாமதமாக வருகிறார், அதிக சம்பளம் கேட்டு பிரச்னை செய்கிறார், இயக்குனர்களுடன் மோதல் என்று நிறைய சர்ச்சைகளும் ஒரு காலகட்டத்தில் சிம்பு மீது இருந்தன.

ஆனால் சமீபகாலமாக நடிகர் சிம்புவின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் படப்பிடிப்புக்கு காலை 6 மணிக்கெல்லாம் சரியாக ஆஜராகி இருக்கிறார். அதே போல் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பொது இடங்களிலும் நேர்த்தியாக நடந்துக்கொள்கிறார். குறிப்பாக முன்பு போல் நிறைய பேசாமல் வார்த்கைளை அளந்து பேசுகிறார், அமைதியாக நடந்துக்கொள்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தக்லைஃப் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சிம்பு கூறியதாவது, பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் நாம் நம்முடைய காட்சி பற்றி மட்டும் தான் கவனம் செலுத்துவோம். ஆனால் கமல் சார் அவருடைய காட்சி மட்டும் இன்றி எல்லோருடைய காட்சி, வசனங்களையும் ரொம்பவும் உற்று கவனிப்பார். இது மாதிரி அவரிடம் இருந்து நிறைய விஷயம் நேரில் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.

இப்போது என்னை பார்ப்பவர்கள் முன்பை விட அமைதியான ஆளாக இருப்பதாக சொல்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த வயதில் அப்படி இருந்தேன். இந்த வயதில் இப்படி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கமல் அவராக இருந்தார். நான் நானாக இருந்தேன். என் திருமணம் நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும் என்று நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்