நடிகர் சிம்பு இப்போது தக்லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 49 படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்தான் இந்த படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் காமெடி ரோலில் மீண்டும் சந்தானம் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இதில் இரட்டை நாயகர்களில் ஒருவர் போல படம் முழுவதும் சிம்புவுடன் வருவார் என்றும் கூறப்பட்டது. சந்தானத்தில் ஹீரோ இமேஜ் பாதிக்காத வகையில் இந்த படத்தில் அவரது ரோல் இருக்க வேண்டும் என்றும் சிம்பு டைரக்டரிடம் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் எஸ்டிஆர் 49 படத்துக்கு துவக்க பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திடீரென அமலாக்கத்துறை விசாரணையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கிக்கொண்டார். இப்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதனால் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த சிவகார்த்திகேயன் நடித்து வந்த பராசக்தி தனுஷ் நடித்த இட்லிகடை சிம்பு நடிப்பதாக இருந்த எஸ்டிஆர் 49 படங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதன்படி டான் பிக்சர்ஸ் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் சிம்பு நடிக்கவில்லை.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பு குறித்து அதன் முக்கிய பொறுப்பாளர்களிடம், எஸ்டிஆர் 49 படத்தை இப்போதைக்கு நிறுத்தி வைத்து விடலாம். பிறகு நான் கால்ஷீட் தருகிறேன். நீங்கள் இட்லி கடை பராசக்தி போன்ற படங்களை முதலில் ரிலீஸ் செய்யுங்கள். அதன்பிறகு நான் கால்ஷீட் தருகிறேன் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார்.
அடுத்ததாக இனி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில்தான் சிம்பு நடிக்க போகிறார். இது காதல் பின்னணி கொண்ட கதை என்று சொல்லப்படுகிறது. ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இனி சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 படம் என்று மணிரத்னம் இயக்கும் படத்தை தான் சொல்ல வேண்டும். டான் பிக்சர்ஸ் எஸ்டிஆர் 49 படத்தை தயாரிக்கவில்லை. அந்த படத்திலும் சிம்பு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னாளில்தான் வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.





