நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 15ம் தேதி பொங்கலுக்கு வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். டிடிடி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தை மலையாளத்தில் ஃபாலிமி படத்தை இயக்குனர் நிதீஷ் சஹதேவ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 147 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது.
இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பால் அடுத்த நாளே 40 தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து தியேட்டர்களின் எண்ணிக்கை 187 ஆக மாறியது. இப்போது 2 வாரங்கள் ஆன நிலையில் இந்த படம் தற்போது 316 தியேட்டர்களில் ஓடிக்கெொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு வெளியான பராசக்தி வா வாத்தியார் படங்கள் மிக மோசமான வரவேற்பை பெற்ற நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் வசூலும் பெரிய அளவில் இருந்து வருகிறது. இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே இந்த படம் 28 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.
மேலும் கேரளாவில் இந்த படம் 1.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதில் ஷேர் ஆக மட்டுமே ரூ. 50 லட்சம் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படத்துக்கே கேரளாவில் ரூ. 25 லட்சம்தான் ஷேர் கிடைக்கும் என்கிற நிலையில் நடிகர் ஜீவா நடித்த டிடிடி படத்துக்கு ரூ. 50 லட்சம் ஷேர் கிடைப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை பொருத்த வரை நடிகர் ஜீவாவுக்கு சூப்பர் கம்பேக் கிடைத்துள்ளது. படத்தின் ஹீரோவாக மட்டுமின்றி கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் அவர் இருப்பதால் ஊர் ஊராக சென்று தியேட்டர்களில் ரசிகர்களை சந்தித்து படத்தை பிரமோசன் செய்தார். மேலும் கேரளாவிலும் அவர் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
டிடிடி படத்தின் தயாரிப்பாளர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி. அவர் துபாயில்தான் இந்த படத்தின் சக்சஸ் மீட் விழாவை நடத்த திட்டமிட்டார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் நண்பர்கள் பலரும் சென்னையில் சக்சஸ் மீட் நடத்த கேட்டுக்கொண்டதால் நாளை டிடிடி படத்தின் சக்சஸ் மீட் விழா சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





