- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சும்மல் பாய்ஸ்க்கும், குணாவிற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா... இது தற்செயல்னு சொன்னா நம்பவே முடியலையேப்பா... எல்லாத்துக்கும்...

மஞ்சும்மல் பாய்ஸ்க்கும், குணாவிற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா… இது தற்செயல்னு சொன்னா நம்பவே முடியலையேப்பா… எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கு போல….

- Advertisement -

மலையாளத்திலிருந்து வந்த திரைப்படம் தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஹிட் அடிக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு வலுவான வெற்றியை கொடுத்துவிட்டு சப்தமே இல்லாமல் வசூலை குவித்து வருகிறது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் இளைஞர்கள், குணா குகையை ஆர்வத்துடன் சுற்றி பார்க்க, அப்போது ஒரு குழியில் இளைஞர் தவறி விழ பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தில் ஒரு வரி கதையே.

- Advertisement -

அதுவும் உண்மை சம்பவத்தை கையில் எடுத்து அதை அப்படியே படமாக்கி இருக்கிறார்கள் படக்குழுவினர். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை தனது கற்பனைகளுடன் கண்முன்னே விவரித்த இயக்குனர் சிதம்பரம், காட்சிக்கு காட்சி நம்மை இருக்கையின் நுனியில் அமர வைத்து சுவாரசியத்தை கூட்டி இருந்தார்.

அதுவும் குணா திரைப்படத்திற்கும், படத்தின் காட்சிக்கும் அவர் போட்ட முடிச்சு கச்சிதமாக இருந்ததால், மலையாளத்தை விட தமிழில் திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது. குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சி புல்லரிக்கும் வகையில் அமைய திரையரங்குகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

- Advertisement -

இந்த திரைப்படம் வந்ததிலிருந்து கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் குணா படத்தைப் பற்றிய பேச்சும் அதிக அளவில் இருந்துள்ளது. பலரும் தற்போது கண்மணி அன்போடு பாடலை தங்களது செல்போனில் ரிங்டோனாக மாற்றி இருக்கின்றார்கள். இப்படி ஒரு சூழலில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கும், குணா படத்திற்கும் இடையே ஒரு ஒற்றுமை என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

அதாவது குணா படத்தில் எடுக்கும்போது கமல்ஹாசனுக்கு 33 வயதாக இருந்ததாம். அதேபோல் இந்த திரைப்படத்தை எழுதி இருக்கும் சிதம்பரத்திற்கும் வயது 33 தான். இது மட்டுமல்ல குணா படம் வெளிவந்து இதுவரை 33 வருடங்கள் ஆகி இருக்கிறதாம். இப்படி சுற்றி சுற்றி அனைத்துமே 33 ஆக இருக்கிறது என்று பலர் வேடிக்கையாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்