- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா வாய்ப்புக்காக அப்பாஸை பிரேக்கப் செய்த பிரபல நடிகை? ஆஹா இப்படி எல்லாம் நடந்திருக்கா?

சினிமா வாய்ப்புக்காக அப்பாஸை பிரேக்கப் செய்த பிரபல நடிகை? ஆஹா இப்படி எல்லாம் நடந்திருக்கா?

- Advertisement -

அப்பாஸ் ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் ஆனாலும் அவரது கியூட்னஸை பார்ப்பதற்காகவே அவர் திரைப்படங்களை பார்க்க வந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அப்பாஸின் மார்க்கெட்டும் ஒரு கட்டத்தில் சரிந்தது.

அதன் பின் பல விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் அப்பாஸ். ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தால் அவரை பலரும் கேலி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்லாது சினிமாத் துறையை சேர்ந்த ஒரு பிரபல நடிகர் அப்பாஸிற்கு ஒரு மிக பெரிய துரோகத்தை செய்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

இதனால் மனம் நொந்துப்போன அப்பாஸ் இந்தியாவே வேண்டாம் என்று முடிவெடுத்து தனது குடும்பத்துடன் நியூஸிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் அப்பாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தபோது அவர் ஒரு நடிகையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

“பூச்சூடவா”, “விஐபி” போன்ற திரைப்படங்களில் அப்பாஸுடன் இணைந்து நடித்த நடிகை சிம்ரன். இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தீவிரமாக காதலித்து வந்தார்களாம். ஒரு கட்டத்தில் சிம்ரனுக்கு பல டாப் கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டிருந்ததாம்.

- Advertisement -

அந்த சமயத்தில் காதல் கிசுகிசுக்கள் வந்தால் தனது கெரியருக்கு பங்கம் விளைந்துவிடும் என்று நினைத்த சிம்ரன், அப்பாஸை பிரேக்கப் செய்து விட்டாராம். எனினும் சிம்ரன் பின்னாளில் நடன அமைப்பாளர் ராஜூ சுந்தரத்தை காதலித்து வந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்