- Advertisement -
சின்னக்குயில் என அழைக்கப்படும் பாடகி சித்ரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, 47 ஆண்டுகளாக பாடல் பாடி பல விருதுகளை நான் வாங்கி இருக்கலாம். ஆனால் விருதுகளை வாங்கிவிட்டால் மட்டுமே ஒருவர் பெரிய ஆளாகி விட முடியாது. கடவுள் நம் வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறாரோ அதை மாற்ற முடியாது. என் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடவுள் ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு பதிலாக வேறொன்றை கொடுப்பார் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு என்ன கிடைத்தாலும் என் மகளை இழந்த துயருக்கு அது ஒருபோதும் ஈடாகாது என்று பாடகி சித்ரா உருக்கமாக கூறியிருக்கிறார்.





