- Advertisement -
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு நேர்காணலில் கூறியதாவது, உணவு உடை உறைவிடம் ஆகிய மூன்றும் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. இதில் உடையைக் குறிக்கும் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நான் திரையுலகில் அறிமுகமானேன். கோவை சரளாவுடன் இணைந்து நடித்த எனது கடைசிப் படத்தின் பெயர் இட்லி அதாவது உடையையும் உணவையும் குறிக்கும் பெயர்களைக் கொண்ட படங்களில் நடித்துவிட்டு இப்போது நடிப்பிலிருந்து விலகியிருக்கிறேன். அதன்பிறகு சிலர் நடிக்க அழைத்தாலும் நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.





