- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் புகார் - பாலியல் கொடுமை செய்தார்,...

தமிழ் சினிமா இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் புகார் – பாலியல் கொடுமை செய்தார், கேமராவில் படம் பிடித்தார் என பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

திரைப்பட பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்பேட் ராஜா இதயராணி படத்தில் ஏதோ பெண்ணே, தியா படத்தில் காதல் கண்மணி உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியவர் ஸ்வாகதா கிருஷ்ணன். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணனின் சகோதரி தான் ஸ்வாகதா கிருஷ்ணன்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஸ்வாகதா கிருஷ்ணன் கூறியதாவது, இனிமேல் என்னால் சினிமாவில் வேலை செய்ய முடியாது. நான் மிகக் கொடுமையான பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவள். உண்மையை சொல்வதென்றால் சென்னையிலிருந்து தப்பித்துதான் இப்போது ரிஷிகேஷ் வந்திருக்கிறேன். எனக்கு இந்த கொடுமை நடந்த போது வேறு யாருக்கும் இது நிகழக் கூடாது.

- Advertisement -

அதனால்தான் நான் சென்ற அந்த இசையமைப்பாளரின் ஸ்டுடியோவுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம். அவர்தான் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் என பல நண்பர்களுக்கு சொன்னேன். வேறு எங்கும் சொன்னது கிடையாது. என்னுடைய 9 வருட காதல் பிரேக் அப்பில் முடிந்தது. அப்போது சம்பந்தப்பட்ட அந்த இசையமைப்பாளரிடம் பணிசெய்து வந்தேன்.

சவுண்ட் இன்ஜினியரிங் முதல் சம்பளம் கொடுப்பது வரை எல்லா வேலைகளையும் நானே செய்தேன். என் காதல் பிரேக்கப் ஆன சமயத்தில் என்னை அவர் கண்ட்ரோல் செய்ய தொடங்கினார். எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தினார். பயண செலவுக்கு மட்டும் பணம் தருவார். நானும் மொத்தமாக சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவரும் கையில் காசு இல்லை என்றே புலம்புவார்.

- Advertisement -

அதுபோல அவரது பல செலவுகளுக்கு என்னிடம் கடன் வாங்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரது குடும்பமே சேர்ந்து இதை செய்கிறார்கள் என எனக்கு இப்போது யோசிக்கையில் புரிகிறது. இது ஒரு நாள் பாலியல் துன்புறுத்தலாக மாறியது. என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். எல்லாவற்றையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்தார். அதை வைத்துக் கொண்டே இதை வெளியே சொல்ல கூடாது என என்னை மிரட்டினார்.

இதை சட்டரீதியாக எதிர்கொள்ள எனக்கு அப்போது தெம்பில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். இதை பலருக்கும் அவர் செய்திருக்கிறார். சென்னையின் எப்ஸ்டீன் அவர். இப்போதைக்கு நான் அவரது பெயரை சொல்லப் போவதில்லை. மேலும் நடந்தவை எல்லாவற்றையும் முழுமையாகவும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக அதற்கான ஒரு நாள் வரும். கண்டிப்பாக அவரது பெயரை நான் சொல்லுவேன். முறைப்படி சட்ட ரீதியாக இதை சொல்ல வேண்டும் என்று ஸ்வாகதா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்