- Advertisement -
Homeபொழுதுபோக்குகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி … பாடகர் பி ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் திடீர் மறைவு...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி … பாடகர் பி ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் திடீர் மறைவு – திருச்சூர் மருத்துவமனையில் கீதம் மறைந்தது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1980 90களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் பாடகர் பி ஜெயச்சந்திரன். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ் படங்களில் அழகான குரல் வளத்தில் பல இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்ற பாடல் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல் மூன்று முடிச்சு படத்தில் வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள், அந்த 7 நாட்கள் படத்தில் கவிதை அரங்கேறும் நேரம், இணைந்த கைகள் படத்தில் அந்தி நேர தென்றல் காற்று, சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ உள்ளிட்ட பல பாடல்களை தமிழில் பி ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.

- Advertisement -

பாடகர் பி ஜெயச்சந்திரன் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். குறிப்பாக மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே பாடலை, நானே ராஜா நானே மந்திரி படத்துக்காக பாடியிருந்தார். அதே போல் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது வைதேகி காத்திருந்தாள் பாடலும் ரசிகர்களால் மறக்க முடியாதது.

கடலோர கவிதைகள் படத்தில் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே பாடல், இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் முதல் பத்து பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படி மிக ஏராளமான அற்புதமான பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியவர்தான் பாடகர் பி ஜெயச்சந்திரன்.

- Advertisement -

அவருக்கு தற்போது 80 வயதான நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடல் நலம் மிகவும் மோசமான நிலையில், அவர்கள் மறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இசை ரசிகர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக இசைக்கான ஒரு குரலாக இல்லாமல், கேட்கும் செவிகளுக்கு இதம் தரும் குரலால் பாடல்களில் ஒலித்திருக்கிறது பி ஜெயச்சந்திரனின் குரலில் பதிவான தமிழ் படப் பாடல்கள். பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது என்ற பாடலும் கூட அவரது குரல்தான். இப்படி பல ஹீரோக்களுக்கு பாடிய பி ஜெயச்சந்திரன் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்