நடிகர் விஜய் நடிப்பில் டாப் நடிகராக இருந்து வருகிறார். ரஜினி, கமல், அஜீத்குமாரை காட்டிலும் விஜய் படங்கள் எப்போதுமே வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. அதே போல் வசூலிலும் விஜய் படங்கள், மற்ற நடிர்களின் படங்களை காட்டிலும் வேகமாக 100 கோடி, 500 கோடி என கடந்துவிடுகின்றன.
அந்த வகையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் 3 நாட்களில் ரூ. 215 கோடி வசூலில் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 75 கோடியை கடந்துள்ளது. முதல் நாளில் 126 கோடி ரூபாயை கடந்த தி கோட் படம், 2 மற்றும் 3வது நாளில் மட்டும் 215 கோடி வசூலை கடந்துள்ளது. இன்று இரவுக்குள் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய், உலகளவில் ரூ. 300 கோடியை எட்டி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், நேற்று விநாயகர் சதுர்த்தி நாளில், தியேட்டர்களில் காணப்பட்ட அதே ஹவுஸ் புல் கூட்டம், வார விடுமுறை தினமான இன்றும் காணப்படுவதால் இன்றும் வசூல் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 1000 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்குடன் தி கோட் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் படங்கள், கடந்த பல ஆண்டுகளாகவே மாஸ் வசூல் என்ற நிலையில்தான் இருந்து வருகிறது. அவரது சூப்பர் ஹிட் படங்கள் மட்டுமின்றி சுமாரான படங்கள் என கருதப்பட்ட பல படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தராத படங்களாக, ஓரளவு லாபம் தந்த படங்களாகவே இருந்திருக்கின்றன.
குறிப்பாக கடந்தாண்டில் வெளியான லியோ படம் கூட பல விதமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானது. எனினும் வசூல் ரீதியாக லியோ படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. ரூ. 650 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் தி கோட் படமும் இப்போது 3 நாட்களில் உலகளவில் ரூ. 215 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 200 கோடி ரூபாய் வசூலை கடந்த விஜய் படங்களில் இது 8வது படமாகும். இதுவரை மெர்சல், சர்கார், பிகில், தெறி, மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய 7 படங்கள் ரூ. 200 கோடி வசூலை கடந்த நிலையில், தி கோட் 8வது படமாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரூ. 100 கோடி கடந்த படங்கள் என்ற பெருமையை லியோ, தி கோட் படங்கள் பெற்றிருக்கின்றன, ரஜினி படங்களுக்கு கூட இந்த பெருமை கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





