- Advertisement -
சினிமா பாடகர் வேல்முருகன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2024 மார்ச் 2ம் தேதி சென்னை விமான நிலையத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக வேல்முருகன் மீது புகார் எழுந்தது. 2024 மே 13ம் தேதி மெட்ரோ ரயில் அதிகாரியை அவர் தாக்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2026 பிப்ரவரி 3ம் தேதி தவெக 3ம் ஆண்டு விழாவில் விஜயை சுவாமி முருகனுடன் ஒப்பிட்டு பாடியதால் சர்ச்சை எழுந்தது. இப்போது கடந்த 15ம் தேதி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் முதல்வர் விஜய்க்கு அரோகரா அறநிலைத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று கோஷம் போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதனால் வேல்முருகன் என்றாலே சர்ச்சை நாயகன் என்பது உறுதியாகி விட்டது.





