- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றி... அரிவாள் செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்... நடிகரை காண...

அமரன் திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றி… அரிவாள் செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்… நடிகரை காண குவிந்த ரசிகர்கள்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இந்த கூட்டணி இணைந்து டான் திரைப்படத்தை கொடுத்தது. இந்தத் திரைப்படம், 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனுக்கு நல்ல மார்க்கெட்டை இந்த திரைப்படம் உண்டு பண்ணியது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே சுதா சூர்யாவுடன் இணைந்து புறநானூறு படத்தை இயக்க இருந்தார். தற்போது அந்த கதை தான் சிவகார்த்திகேயனிடம் சென்று இருக்கிறது. இதில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

- Advertisement -

ஸ்ரீ லீலாவுக்கு முதலாவது நேரடி தமிழ் திரைப்படமாக இது அமைகிறது. அனேகமாக இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நடுவே சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். சென்னையை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஆனால் சொன்ன தேதியை விட இதன் சூட்டிங் தள்ளி போவதாக கூறப்படுகிறது. அண்மையில் பெருங்களத்தூரில் கூட இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அனேகமாக மே மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் நடுவே சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது.

 

இதற்கு முக்கிய காரணம் அவருக்கு அண்மையில் வெளியான அமரன் திரைப்படம் தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஏராளமான குவிந்தனர். இதனால் அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது.

 

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரையில் உள்ள கள்ளழகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அவர்கள் அரிவாள் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நடிகரை காண அங்கு ஏராளமானோர் குவிந்தனர். சிலர் செல்போனில் செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காட்சி அளித்தது.

- Advertisement -

சற்று முன்