பொதுவாக இந்திய சினிமாவில் பெரிய வசூலை குவிப்பது இந்தி படங்களாக மட்டுமே முன்பு இருந்தன. ஆனால் இப்போது கன்னடம் தெலுங்கு மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படங்கள் எல்லாம் 1000 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக கடந்து விடுகின்றன. ஆனால் தமிழில் இன்னும் ஒரு படம் கூட இந்த வசூல் சாதனையை புரியவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தரும் விஷயமாக தான் உள்ளது.
ஆனால் இந்தி படங்களை பொருத்த வரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் இப்போது மாறியிருக்கிறது. முன்பெல்லாம் நிறைய முன்னணி நட்சத்திர நடிககர் நடிகைகள் இணைந்து நடித்த படங்கள் பெரிய வெற்றியை குவித்தன. அதற்கு உதாரணமாக ஹம் ஆஃப் ஹே ஹைகோன் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுகுறித்து நடிகர் அக்ஷய்குமாரும் சமீபத்தில் பேசியிருக்கிறார்.
பாலிவுட் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இன்றைய தலைமுறை நடிகைகள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து தொழில்முறை அணுகு முறையுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் அர்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது.
முந்தைய கால நடிகைகளுடன் ஒப்பிடும்போது இன்றைய நடிகைகள் சற்றே பாதுகாப்பான முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக சவாலான கதாபாத்திரங்கள் அல்லது கதையின் தேவைக்காக பெரிய ரிஸ்க்குகளை எடுக்க அவர்கள் தயங்குகின்றனர். அதேபோல் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்கவும் பலர் விருப்பம் கட்டுவதில்லை.
ஒரு படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்தால் அது சினிமாவுக்கு புதிய பரிமாணத்தையும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் வழங்கும். முன்பு பல நடிகர்கள் இணைந்து மல்டி ஸ்டார் படங்களில் நடித்துள்ளனர். தற்போது அந்த போக்கு குறைந்து வருகிறது.
ஒரு நல்ல கதை மற்றும் வலுவான கதாபாத்திரம் இருந்தால் மற்ற நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள நடிகைகள் முன் வர வேண்டும். இது சினிமாத்துறையின் வளர்ச்சிக்கும் உதவும். எனவே இன்றைய நடிகைகள் மல்டி ஸ்டார் படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று நடிகர் அக்சய் குமார் கூறியிருக்கிறார்





