கடந்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படம் திரைக்கு வரும் வரை அந்த படம் குறித்த விவரங்கள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு தெரியாது. ஹீரோ ஹீரோயின் டைரக்டர் படத்தின் டைட்டில் போன்றவை ஏதேனும் பத்திரிகை வாயிலாக தெரிய வந்தால்தான் உண்டு. திரைக்கு வந்த பின்புதான் அந்த படத்தின் முழு விவரங்களும் தெரிய வரும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் படத்தின் பூஜை போடுவது முதல் படம் ரிலீஸ் ஆகும் வரை அனைத்து விவரங்களும் அப்டேட் ஆகி விடுகின்றன. டிஜிட்டல் நவீன யுகத்தில் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை கூட வீடியோவாக பகிர்ந்து விடுகின்றனர். அவ்வப்போது அப்டேட் என்ற பெயரில் படத்துக்கு ஏகப்பட்ட வைப் ஏற்றி விடுகின்றனர்.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய யுக்தியை கையாளுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிவகார்த்திகேயன். சொந்தமாக சின்ன பட்ஜெட் படங்களை அவ்வப்போது தயாரிக்கிறார். சமீபத்தில் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தாய்கிழவி படம் வெளியானது.
ராதிகா சரத்குமார் நடித்த இந்த படம் இதுவரை 15 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இதற்கிடையே தாய்கிழவி படத்துக்காக சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி வினியோகம் செய்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது படம் ரிலீஸ் ஆகும் போது இப்படி செய்வது வழக்கமாக உள்ளதாம். அவர் நடித்த படத்துக்கு முதல் நாளில் பெரிய ஓபனிங் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு டெக்னிக்கை அவர் பின்பற்றுவதாக தெரிகிறது. இதற்கு முன்பு பராசக்தி படம் ரிலீஸான போதும் 4 கோடி ரூபாய்க்கு இதே போல் ரசிகர்களுக்காக தனது சொந்த பணத்தில் சிவகார்த்திகேயன் டிக்கெட்டுகள் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
அதற்கு முன்பு மதராஸி படம் ரிலீஸ் ஆன போதும் ஒரு பெரிய தொகைக்கு சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படி லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளை சிவகார்த்திகேயன் வாங்குவது படத்துக்கு பெரிய ஓபனிங் என்ற இமேஜ் கிடைக்கும் என்பதால்தான் என்கின்றனர். இப்படி எல்லாம் படத்தை தூக்கி பிடிக்க வேண்டுமா என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர்.





