- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது என் ஊரு சார்... நானும் கூட நிப்பேன்... மாஸ் காட்டும் மதராஸி ட்ரெய்லர்... சிவகார்த்திகேயனுக்கு...

இது என் ஊரு சார்… நானும் கூட நிப்பேன்… மாஸ் காட்டும் மதராஸி ட்ரெய்லர்… சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமையுமா…

- Advertisement -

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருப்பது மதராசி திரைப்படம். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. இதன் மூலம் இந்த நிறுவனம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகம் ஆகிறது. ஏ ஆர் முருகதாஸ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதற்கு முன்பாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய, ஸ்பைடர் மற்றும் தர்பார் என இரண்டு திரைப்படங்களுமே தோல்வியை தழுவின. அண்மையில் அவர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்னும் பாலிவுட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் அங்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் மதராஸி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுக்குமா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். கன்னட நடிகையான இவர் ஏற்கனவே, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக வந்தார். இது போக விக்ராந்த், வித்யூட் ஜமால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் மதராஸி திரைப்படத்திலிருந்து முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. அதில், இரண்டு கெட்டப்களில் அசத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ருக்மணி வசந்துடன் இணைந்து உருக உருக காதலிப்பது, பிறகு சண்டைக் காட்சிகளில் அனல் தெறிக்க விளையாடுவது என அவரது போர்ஷன்கள் எடுக்கப்பட்டிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த முருகதாஸ், வடமாநில கும்பலுக்கும், சிறப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் திரைக்கதை என்று சுருக்கமாக சொல்லி இருந்தார். ட்ரெய்லரை பார்க்கும்போது அது உறுதியாகி இருக்கிறது. வட மாநில கொள்ளை கும்பல் இங்கு, சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்க முற்படுவது போலவும் அதனை சிறப்பு படை குழு தடுப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தெறிக்கும் ஆக்சன் காட்சிகள் படத்தின் ட்ரெய்லரில் அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் கதை கஜினி போலவும் திரைக்கதை துப்பாக்கிப் போலவும் இருக்கும் என்று முருகதாஸ் கூறியிருந்தார். ஆனால் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது, கஜினி போலவே இருப்பதாக பலர் இணையத்தில் கூறி வருகின்றனர். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்