- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனரின் செய்கையால் கடும் வருத்தத்தில் சிவகார்த்திகேயன்... தவிக்கும் நடிகரை கண்டு கொள்வாரா இயக்குனர்...

பிரபல இயக்குனரின் செய்கையால் கடும் வருத்தத்தில் சிவகார்த்திகேயன்… தவிக்கும் நடிகரை கண்டு கொள்வாரா இயக்குனர்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. சாய் பல்லவி படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

குறிப்பாக மேஜர் முகுந்தன் என்பவரின் வாழ்க்கை கதை தான் இது என்று கூறப்படுகிறது. இது உண்மை என்பதற்கு போலவே, படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் முகுந்தன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் 30 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகிறது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜயுடன் சர்க்கார், ரஜினிகாந்துடன் தர்பார், மகேஷ்பாபு உடன் ஸ்பைடர் என தொடர் தோல்வி திரைப்படங்களை முருகதாஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அவர் விஜய்க்கு அடுத்ததாக எழுதிய கதையும் படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. இதனால் தவித்து வந்த இயக்குனருக்கு சரியான நேரத்தில் கை கொடுத்து உதவினார் சிவகார்த்திகேயன். ஏ ஆர் முருகதாஸின் கதைக்கு எஸ் கே ஒகே சொல்ல படப்பிடிப்பும் தொடங்கியது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருச்செந்தூரிலும் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.

 

இதில் ருக்மணி வசந்த், துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமால், விக்ராந்த் என ஏராளமான நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த திரைப்படத்திற்காக நீண்ட தாடியுடன் காட்சி அளிக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும்போதே பாலிவுட் நடிகர், சல்மான் கானை வைத்து இயக்கும் வாய்ப்பை ஏ ஆர் முருகதாஸ் பெற்றார். இதற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டது.

 

தற்போது சல்மான் கான் இதற்கான தேதியை தொடர்ந்து அளித்திருப்பதால், சிவகார்த்திகேயன் படத்தை விட்டு விட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம் முருகதாஸ். இதன் காரணமாக தனது திரைப்படத்தின் வேலைகள் தள்ளிப் போவதால் இயக்குனர் மீது மிகுந்த வருத்தத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறாராம். இந்த ஆண்டு படத்தை வெளியிட வேண்டும் என்று எஸ் கே முடிவெடுத்த சூழலில் தற்போது அது நடைபெறாமல் போய்விட்டதாம். இயக்குனருக்கு கை கொடுத்த உதவி என்பது தற்போது அவருக்கே வினையாக மாறிவிட்டதாக திரைத்துறை வட்டாரத்தில் சிலர் கூறி வருகிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்