தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் உலக அரங்கிலும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் மிக முக்கியமானவர் ஏ ஆர் ரகுமான். தனது தனித்துவமான இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் அவர், இன்று வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார்.
ஏ ஆர் ரகுமான் இருக்கிறார் என்றால் அந்த திரைப்படம் வெற்றி என்றும், பாடல் நிச்சயம் ஹிட் என்றும் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். அந்த அளவுக்கு, தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்தவர் ஏ ஆர் ரகுமான். 2020 ஆம் ஆண்டிலும், தற்போதைய தலைமுறையினர் விரும்பும் வகையில் அவர் மெட்டுகளை அமைத்து வருகிறார்.
இதற்கு ராயன் படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலே சாட்சி. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் வெளியான அறிவிப்பு ஏ ஆர் ரகுமான் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இசையமைப்பாளரின் மனைவியான சாய்ரா பானு திடீரென அவரை பிரிவதாக அறிவித்த தகவல் தான் அது.
சாய்ரா பானுவின் வழக்கறிஞர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர்கள் பிரிவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் இருவருக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவதில் வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இதே போல் ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருந்த பதிவில், 30 ஆண்டு கால திருமண பயணத்தை நோக்கி செல்லும் போது இப்படி ஒரு தடை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
உடைந்த அத்தியாயத்தில் இருந்து பயணம் தொடரும் என குறிப்பிட்டு இருந்தார். இவர்களின் முடிவு, இந்திய திரையுலகில் பேசு பொருள் ஆனது. அப்போது தங்கள் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் கூறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் இருக்கும் மோகினி டே என்பவரும் அதே நாளில் தனது கணவரை விவாகரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் இருவரையும் இணைத்து வைத்து எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல் தங்கள் கருத்துக்களை கூறி வந்தனர். இதனால் மனம் வருந்தியுள்ள ஏ ஆர் ரகுமானின் மகன், சமூக வலைதளத்தில் தனது தந்தை ஏ ஆர் ரகுமானையும் ஒரு குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்து இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார். ஒருவரைப் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் தவறான தகவல்களை பதிவு செய்வது வேதனை அளிப்பதாகவும், அவரின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அமீனின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





