- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் படத்தில் நான் இனி நடிக்க மாட்டேன் - ஹிட் படம் கொடுத்த டைரக்டரை...

நெல்சன் படத்தில் நான் இனி நடிக்க மாட்டேன் – ஹிட் படம் கொடுத்த டைரக்டரை இப்படி தூக்கி எறிந்து பேசினாரா சிவகார்த்திகேயன் ?

- Advertisement -

டிவி தொகுப்பாளராக இருந்து, சினிமா நடிகரானவர் சிவகார்த்திகேயன். மேடைகளில் மிமிக்ரி கலைஞராக நடித்துக்காட்டிய சிவகார்த்திகேயனுக்கு, சினிமாவில் நடித்த போது, மேடைகளில், டிவி நிகழ்ச்சிகளில் அவர் நடித்திருந்த அனுபவம், கை கொடுத்தது. அதனால் இயல்பான நடிகராக அவரை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். விரைவில் முன்னணி நடிகரானார்.

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நடித்த படங்களில் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன் போன்ற படங்கள் அவரது வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமைந்தது. அதே நேரத்தில் இந்த படங்களில் சிவகார்த்திகேயன் நண்பனாக நடித்த சூரிக்கும், அவரது நடிப்பு பயணத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று முன்னணி காமெடி நடிகராக மாற்றித் தந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் இப்படி வெற்றிப் படங்களில் நடித்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகின. குறிப்பாக ஹீரோ, டான், பிரின்ஸ், மிஸ்டர் லோக்கல், மான் கராத்தே போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. இப்படி பிளாப் தந்த படங்களால் மனச்சோர்வில் இந்த சிவகார்த்திகேயனை மீட்டது இயக்குநர்தான் நெல்சன்.

கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கிய படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன் மிலிட்ரி டாக்டராக நடித்திருந்தார், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். இளவரசு, தீபா, வினய், ரெடின் கிங்ஸ்லி, விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனுக்கும் கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

அதன்பிறகு விஜய் நடித்த பீஸ்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படங்களை இயக்கிய நெல்சன், அடுத்து ஜெயிலர் 2 படத்தை டைரக்ட் செய்ய ஆயத்தமாகி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்த செய்தியாளர்கள். மீண்டும் நெல்சனுடன் படம் செய்வீர்களா, அவருடன் இணைந்து பணிசெய்வது எப்போது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நெல்சனுடன் மீண்டும் எங்கே இணைவது, அவர் 600 கோடி வரை ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பெரிய பெரிய படங்களை இயக்கி வருகிறார். நாங்கள் மீண்டும் இணைவதற்கு இனி வாய்ப்பு கம்மிதான். ஆனால் நெல்சனின் வளர்ச்சி எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சற்று முன்