- Advertisement -
Homeபொழுதுபோக்குயுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள்… மேடையில் விமர்சனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் - காரில்...

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள்… மேடையில் விமர்சனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் – காரில் வந்தபோது நடந்தது குறித்து ஓபன் டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். அமரன் படம் அபார வெற்றியடைந்துள்ளது. இந்த படம் உலகளவில் 325 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 1965 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இப்போது பாலிவுட்டில் நடிகர் சல்மான்கான் நடித்துவரும் சிக்கந்தர் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அந்த படம் முடிந்த பிறகு பாதியில் நின்றுள்ள சிவகார்த்திகேயன் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் முரளி மகன் அதர்வா, ஏற்கனவே பாணா காத்தாடி சண்டி வீரன் பரதேசி கணிதன் 100 இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இப்போது சிவகார்த்திகேயனுடன் 1965 படத்திலும் அதர்வா நடித்து வருகிறார். அதர்வாவின் தம்பி, நடிகர் முரளியின் 2வது மகன் ஆகாஷ் நேசிப்பாயா என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

நேசிப்பாயா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வௌியீடு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

- Advertisement -

விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் பள்ளியில் படித்த போது, கல்லூரியில் படித்த போது அதிகமாக கேட்ட பாடல்கள் என்றால், அது யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள்தான். இப்போது அவரது பாடல்களை கேட்டால் கூட எனக்கு கடந்த கால நினைவுகள் என் மனதில் வந்துவிடுகிறது.

ஒரு நாள் நான் என்னுடைய காரில் வந்துக்கொண்டு இருந்தேன். அப்போது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களை கேட்டு ரொம்பவும் எமோஷனல் ஆகி விட்டேன். உடனே யுவன் சாருக்கு போன் செய்து பேசினேன். அந்தளவுக்கு அவரது பாடல்கள் மக்களின் மனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது, என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

- Advertisement -

சற்று முன்