- Advertisement -
Homeபொழுதுபோக்கு"சேனை ஒன்று தேவை... பெரும் சேனை ஒன்று தேவை..." வெறும் டைட்டில் டீசரிலேயே பட்டையைக் கிளப்பிய...

“சேனை ஒன்று தேவை… பெரும் சேனை ஒன்று தேவை…” வெறும் டைட்டில் டீசரிலேயே பட்டையைக் கிளப்பிய சுதா கொங்கரா… கெத்து காட்டும் நட்சத்திரங்கள்…

- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சொல்லப்போனால் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற திரைப்படம் அதுதான் என்று அடித்துக் கூறலாம். தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

குறுகிய காலத்தில் திரையுலகுக்கு வந்த சிவகார்த்திகேயன் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை அந்த திரைப்படத்தின் மூலம் புரிந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் இணைவதாக இருந்தது. இது சிவகார்த்திகேயனின் 24 ஆவது திரைப்படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். ஆனால் அவருக்கு மார்ச் மாதம் வரை கால் சீட் இல்லாததால், தனது 25வது திரைப்படத்தில் கவனம் செலுத்த சிவகார்த்திகேயன் சென்று விட்டார். இதனைத் தான் சுதா கொங்கரா இயக்குகிறார்.

சூர்யாவை வைத்து புறநானூறு என்னும் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமே இதனை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மதுரை திருச்சி சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் இதனை படமாக்க சுதா கொங்கரா திட்டமிட்டார்.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில், இந்தக் கூட்டணி திடீரென விலகியது. இதன்பிறகே சிவகார்த்திகேயனுக்கு புறநானூறு திரைப்படம் போய் சேர்ந்தது. ஆனால் இந்த முறை டைட்டிலை மாற்ற வேண்டும் என்று சுதா முடிவு செய்தார். அதன்படி படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்திருக்கிறார். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார்.

கல்லூரி மாணவர்களின் கதையையும் அவர்களின் புரட்சியையும் மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரவி மோகன் அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரின் கதாபாத்திரங்களின் அறிமுகம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. டீசரிலேயே ஜிவி பிரகாஷின் இசை அருமையாக இருப்பதாக கூறுகிறார்கள். டீசரின் இறுதியில் சிவகார்த்திகேயன் பேசும் சேனை தேவை வசனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பராசக்தி திரைப்படம் வெளியாகும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்