- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... விஜயின் கோட் படத்தில் இத்தனை பேர் கேமியோ ரோலில் வருகிறார்களா!... மொத்த வித்தையையும் இறக்குகிறாரா...

என்னது… விஜயின் கோட் படத்தில் இத்தனை பேர் கேமியோ ரோலில் வருகிறார்களா!… மொத்த வித்தையையும் இறக்குகிறாரா வெங்கட் பிரபு…

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை சுருக்கி ரசிகர்கள் கோட் என்று அழைத்து வருகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

 

- Advertisement -

இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு வைத்திருக்கிறார். இதில் ஒரு விஜயை மிகவும் இளமையான தோற்றத்தில் காட்டுவதற்காக, வெளிநாட்டிற்கு சென்ற படக்குழு ஏ ஐ தொழில் நுட்பத்தை கையில் எடுத்தது.

 

- Advertisement -

படத்தில் போஸ்டரிலும், இரண்டு விஜய்க்கான வித்தியாசத்தை காட்டினார்கள். கோட் திரைப்படத்தின் மூலம், லைலா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன் ஆகியோர் ரீ என்ட்ரி கொடுக்கிறார்கள். இதில் முக்கியமாக மைக் மோகன் நடித்து வருவதை பலரையும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 80களில் முக்கிய ஹீரோவாக வலம் வந்த அவர், தொடர்ந்து 25 திரைப்படங்களை வெற்றி திரைப்படங்களாக கொடுத்தார்.

 

ஆனால் அதன் பிறகு அவர் சரியான படங்களை தேர்வு செய்யாததால், திரைத் துறையில் இருந்து விலகினார். இப்படியான சூழலில் தான் அவர் விஜய் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் போக, இளம் நடிகை மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், வி டிவி கணேஷ், இவானா உள்ளிட்டோரும் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 

தற்கால சூழலுக்கும், எதிர்காலத்திற்குமான கதையைத்தான் இந்த திரைப்படம் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக படத்தில், முக்கிய கதாபாத்திரங்களை கேமியோ ரோலில் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருக்கிறாராம். குறிப்பாக திரிஷா கோட்டு படத்தில் நடித்திருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியானது.

 

இது போக சிவகார்த்திகேயனும் படத்தில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. கோட் திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிவகார்த்திகேயனோடுதான் வெங்கட் பிரபு இணைய இருக்கிறார். இதனால் அந்த திரைப்படத்திற்கான சில அம்சங்கள், கோட் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மறைந்த நடிகர் விஜயகாந்த்தையும் ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரனும் வித்தியாசமான லுக்கில் படத்தில் இருக்கிறாராம். ஐபிஎல் விளையாட்டு வீரர்களும் படத்தில் வருகிறார்களாம். இப்படி ஏகப்பட்ட சிறப்பு விஷயங்களை வெங்கட் பிரபு வைத்திருப்பதால், படம் வெளியாகும் செப்டம்பர் 5ஆம் தேதியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்