நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அவர்தான் லேடி சூப்பர் ஸ்டார். மற்ற நடிகைகள் எல்லாம் திருமணமாகி கணவர், குடும்பம் என செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் நயன்தாராவுக்கு அது நேர்மாறாக நடக்கிறது. திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு தாயான பின்புதான் பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. சம்பளமும் 10, 12 கோடி ரூபாய் என எகிறுகிறது.
தமிழ் சினிமாவில் சில டாப் ஹீரோக்களை போல, நயன்தாராவும் இயக்குநர், தயாரிப்பாளர்களை கண்டிஷன் போட்டு, நிபந்தனைகளுக்கு தலையாட்டும் இயக்குநர், தயாரிப்பாளருக்கு மட்டுமே கால்ஷீட் தருகிறார். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, கொடைக்கானலில் ஒரு மலை கிராமத்தில் நடக்கும் மண்ணாங்கட்டி படப்பிடிப்புக்கு, வரமாட்டேன் என மறுத்து, சென்னையில் அந்த எஸ்டேட் போல செட் போட வைத்து, அதில் வந்து நடித்திருக்கிறார்.
மற்றொரு முக்கிய உதாரணம், நயன்தாரா நடித்து வரும் 75வது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்து வரும் அலப்பரைகள்தான். மதியத்துக்கு பிறகு நெர்வஸ் ஆகிவிடும் நயன்தாரா, சீக்கிரம் படப்பிடிப்பை முடியுங்கள் என அவசரப்படுத்தி, படக்குழுவினரை பாடாய் படுத்தி விடுகிறார். மாலை 4 மணிக்கு பிறகு, எந்த காட்சி எடுத்தாலும் அதில் இன்வால்மெண்ட் இல்லாமல் நடிக்கிறார். அதாவது இதற்கு அவரது குழந்தைகள் பாசம் காரணம் என ஒரு தகவல் இருக்கிறது.
நடிகர்கள்தான் இப்படி பந்தா காட்டி, டார்ச்சர் செய்து படக்குழுவினரை எரிச்சல்படுத்துவது வழக்கம். அவர்களை மிஞ்சும் அளவுக்கு நயன்தாரா பயங்கர அட்ராசிட்டி செய்வதால், இவரை வைத்து இந்த படத்தை முடித்தால் அதுவே போதும் என்ற சலிப்பான மனநிலைக்கு இயக்குநர், தயாரிப்பாளர்கள் வந்துவிடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக சமீபமாக நயன்தாரா இந்த விஷயத்துக்கு கண்டிசன் போடுவது குறித்து ரேடியோ மிர்சி சுசித்ரா ஒரு அதிர்ச்சிக்கரமான தகவலை சொல்லி இருக்கிறார். அதாவது படத்தில் நயன்தாரா அழுகிற காட்சி வந்தால், அவர் கண்களில் கிளிசரின் விட்டு அழ மாட்டாராம். உதடுகளை குவித்து, அழுவது போல பாவ்லா மட்டுமே செய்வாராம். அதை சிஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நயன்தாரா கண்ணீர் விட்டு அழுவது போல் காட்சியை இயக்குநரே உருவாக்கி கொள்ள வேண்டுமாம்.
கிளிசரின் பயன்படுத்தினால் கண்களின் அழகு போய்விடும். கண்களில் இருந்த நீர் வழிவது கண்களை பாதிக்கும் என்பதால், இந்த விஷயத்தில் கூட நயன்தாரா கண்டிசன் போடுவது இயக்குநர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. பத்து கோடி, பனிரெண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருந்துக்கொண்டு, இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்கிறாரே என, படப்பிடிப்பு தளத்தில் பலரும் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.





