- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் அந்த கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் காட்டாத ரெஸ்பான்ஸ் - சிஷ்யனுக்கு அடிச்ச...

ரஜினியுடன் அந்த கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் காட்டாத ரெஸ்பான்ஸ் – சிஷ்யனுக்கு அடிச்ச ஜாக்பாட் சான்ஸ்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்துக்கு ரஜினிகாந்த் தயாராகிறார். வரும் ஏப்ரல் முதல் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தை முடித்த பிறகு, அடுத்து நெல்சன் இயக்கத்தில் தனது 172 படமாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை தயாரிக்க, ரஜினிக்கு ரூ. 210 கோடி சம்பளம் தர எந்த தயாரிப்பு நிறுவனம் முன்வருகிறதோ, அதற்கு ஓகே சொல்ல ரஜினி முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ஒன்றிலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதையை, ராகவா லாரன்ஸ் எழுதியிருக்கிறார். இந்த படத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடிக்க 20 நாட்கள் வரை கால்ஷீட்டும் தந்துள்ளார்.

வேட்டையன் படம் முடிவடையும் தருவாயில் உள்ள லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள், அடுத்து வேகம் எடுத்துள்ளது. ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஸ்கிரிப்ட் ரைட்டப்பில் சில மாதங்களாக பிஸியாக இருந்த லோகேஷ் கனகராஜ், படத்தில் நடிக்கும் கேரக்டர்களை தேர்வு செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒருவர் ஹீரோ, ஒருவர் வில்லன் என்றும் கூறப்படுகிறது. அதே போல் மெயின் வில்லனாக இந்த படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் கமிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வில்லன் கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயனும் ஆசைப்பட்ட நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதற்கு ரெஸ்பான்ஸ் தரவில்லை.

ரஜினிக்கு வில்லன் சிவகார்த்திகேயன் என்றால், அது ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது. ஏனென்றால் ரஜினி உயரம் வேறு, சிவகார்த்திகேயன் உயரம் வேறு என்ற நிலையில், கடைசியில் ரஜினியை குருவாக மதிக்கும் அவரது சிஷ்யன் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே நடிக்க வந்த புதிதில், பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லன் ரோல் செய்திருப்பார் லாரன்ஸ். அதனால் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவது ராகவா லாரன்ஸ்தான் என உறுதியாக முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்