தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் அது இது எது காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக குறுகிய காலத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ்கே 23 படத்துக்கு ரூ. 40 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கிய அதே காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக களம் இறங்கியவர்கள் நடிகர்கள் முரளி மகன் அதர்வா, கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக், பிரபு மகன் விக்ரம் பிரபு. ஆனால் 3 பேருமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஓரிரு படங்கள் தவிர, வேறு படங்கள் பெயர் சொல்லும்படி இல்லை.
ஆனால் சிவகார்த்திகேயன், சொல்லியடித்த கில்லியாக தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கிறார். அவர் தோல்வி படங்களை தந்தாலுமே, குறிப்பிட்ட வெற்றிப் படங்களை தந்து தனது இடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு, அதர்வா போன்ற வாரிசு நடிகர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லை. மற்ற நடிகர்கள் யாருமே நடிக்க விரும்பாத பட்சத்தில், நடிக்க முடியாது என்று கூறிய நிலையில் சில இயக்குனர்கள் அந்த கதைகளில் நடிக்க மட்டுமே அதர்வா, விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் போன்றவர்களை நடிக்க அழைக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் நிலைத்து வலம் வர முக்கிய காரணம், அவர் சில முக்கிய யுக்திகளை கடைபிடிக்கிறார். அதாவது அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களை மிகச் சரியாக தேர்வு செய்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே அவர் நடிக்கிறார். சாதாரண தயாரிப்பு நிறுவனங்களை ஏற்பதில்லை.
அதே போல், தனக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகை மிக பிரபலமான ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜ் உள்ள நடிகையாக தேர்வு செய்கிறார். குறிப்பாக ஹன்சிகா மோத்வானி, கீர்த்தி சுரேஷ், சமந்தா, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என பெரிய ஹீரோக்களின் ஜோடி நடிகைகளை தனக்கு நாயகியாக்கி அதன்மூலம் அவரும் பெரிய ஹீரோ என்ற பிம்பத்தை, வளரத் துவங்கிய அந்த காலகட்டத்திலேயே மிக சிறப்பாக செய்துவிட்டார். இப்போதும் இந்த 2 விஷயங்களில் அவர் கவனமாக இருப்பதால் அவர் தொடர்ந்து ஸ்டார் ஹீரோவாக வலம் வருவதாக, வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.





