- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிரடி சரவெடி, கோட் படத்தில் கிளைமாக்ஸ்சில் வரும் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா? போடு வெடிய...

அதிரடி சரவெடி, கோட் படத்தில் கிளைமாக்ஸ்சில் வரும் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா? போடு வெடிய – வெங்கட் பிரபுவின் அசத்தல் பிளான்

- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வந்த கோட் படம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் சின்ன சின்ன பேட்ச் ஒர்க் பணிகள் மட்டுமே மிச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணிகளை முடித்த பிறகு, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் டைரக்டர் வெங்கட் பிரபு, படத்தின் விஎப்எக்ஸ் தொழில் நுட்ப பணிகளை மேற்பார்வையிட்டு படத்தை முழுமையாக முடிக்க இருக்கிறார். அதன் பிறகு கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகிறது.

இதை தொடர்ந்து தனது 69வது படத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் அவரது பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சென்னை பிரசாத் ஸ்டுடியோவில், பட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை டைரக்டர் எச். வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நாயகி, சக நடிகர் நடிகையர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.வரும் நாட்களில் அந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்தச் சூழலில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நிறைய அதிரடி விஷயங்களை தந்து ரசிகர்களை மகிழ்விக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த டிசம்பர் மாதத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சில காட்சிகளில் வருகிறார். அதேபோல் மறைந்த காமெடி நடிகர் விவேக், இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் சில காட்சிகளில் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படத்தில் சிஎஸ்கே அணி சார்ந்த சில வீரர்களும், நடித்துள்ளனர். அவர்களும் கேமியோ ரோலில் சில காட்சிகளில் வருகின்றனர். அவர்களுடன் சிஎஸ்கே அணி ரசிகராக வெங்கட்பிரபுவும் நடித்துள்ளார். இப்படி பல விஷயங்களை செய்துள்ள வெங்கட்பிரபு, இந்த படத்தில் பிரசாந்தை நடிக்க வைத்துள்ளார். மைக் மோகனை வில்லனாக காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தற்போது முக்கிய தகவலாக படத்தின் கிளைமாக்ஸ்சில் சில காட்சிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் வர இருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதில் விஜயின் நண்பராக அவர் கடைசியில் சில காட்சிகளை தோன்றி நடிக்க இருக்கிறார். இதன்மூலம் நடிகர் விஜயுடன் சிவகார்த்திகேயன் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் இதுவரை விஜய் நடித்த சில படங்களுக்கு அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார் என்பதும், இப்போது விஜயுடன் படத்தில் தோன்றி நடிக்க உள்ளார் என்பதும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை பொருத்தவரை பல வித்தியாசமான புதிய விஷயங்களை, ரசிகர்களை கவரும் விதமாக கொண்டு வந்து இந்த படத்தை அதிரி புதிரி அதிரடி சரவெடி படமாக ரசிகர்களுக்கு தருவதில் வெங்கட் பிரபு தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்