சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தனது திறமையால் அந்த ஷோவின் டைட்டில் வின்னரானார். அதனையடுத்து அதே சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானார். தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை செம காமெடியாக நகர்த்தி செல்வதில் அவருக்கு நிகர் அவரே. இன்னமும் பல தொகுப்பாளர்களுக்கு ரோல்மாடலாகவும் அவர் இருக்கிறார்.
சூழல் இப்படி இருக்க திரைப்படங்களில் அறிமுகமாகி ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் பொறுமையாக கடந்து தனது திறமையை வளர்த்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக டாக்டர் படம் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. ஒரு படம்தான் இப்படி வசூல் செய்யும் என பலரும் கூறிய சூழலில் அடுத்ததாக அவர் நடித்த டான் படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
வரிசையாக இரண்டு படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்ததை கண்டு பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர் பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. ஒரே வாரத்தில் தியேட்டரிலிருந்து படங்கள் தூக்கப்பட்டன. இது சிவாவையும் அவரது ரசிகர்களையும் ரொம்பவே அப்செட்டாக்கியது.
பிரின்ஸ் படத்துக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார். பிரின்ஸ் கொடுத்த அடியை மாவீரன் மூலம் சரி செய்துகொண்டார் அவர். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனால் அவர் படு உற்சாகத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரின் இயக்கத்தில் சிவா நடிப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நிலவரம் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது அவர் 30லிருந்து 35 கோடி ரூபாய்வரை தற்போது சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறாராம். மாவீரன் படத்துக்குக்கூட அந்த ரேஞ்சில்தான் சம்பளம் வாங்கினாராம். அந்தப் படம் ஹிட்டானதாலும், கமலின் தயாரிப்பில் நடிக்கும் படம் க் அண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கையினாலும் அடுத்து தனது சம்பளத்தை ஏற்ற திட்டமிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம். அதன்படி அவர் 70 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை விரைவில் ஃபிக்ஸ் செய்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பளத்தை ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கே கேட்டு பார்க்கலாம்; அப்படி கிடைக்காத பட்சத்தில் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு கேட்கலாம் என்ற ப்ளானிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி என்ன ஹிட் கொடுத்தீட்டிங்கனு 70 கோடி ரூபாய் ரேஞ்சுக்கு போறீங்க என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.





