தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள வீணாக போனதை எல்லாம் தூக்கி எறிவோம். 75 வருஷ பவள விழா பாப்பையும் 55 வருஷ பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோமா?
ஸ்டாலின் சார் இந்த தேர்தலில் தோற்றதற்கு அப்புறம் எப்படி எல்லாம் ஃபீல் பண்ண போகிறார் என்று கொஞ்சம் சொல்லவா? ஏன் இந்த விஜயை பாடா படுத்தினோம்? ஏன் இந்த விஜயை வேதனைப்படுத்தினோம்? ஏன் இந்த விஜய்க்கு எதிரா சதி செய்தோம்? ஏன் இந்த விஜய்க்கு எதிரா சூழ்ச்சி செஞ்சோம்? இப்படி நினைச்சு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணப் போறீங்க. மக்களே உங்களை ஃபீல் பண்ண வைக்கப் போறாங்க.
நான் என்ன கெடுதல் செஞ்சுட்டேன் உங்களுக்கு? நீங்க சாப்பிடற சாப்பாட்டுல மண்ணை கிண்ணை அள்ளி போட்டுட்டேனா? உங்க ஆட்சியோட லட்சணத்தை உங்க ஆட்சியில் நடந்த ஊழலை நீங்களும் மந்திரிகளும் அடிக்கிற கொள்ளையை மக்களுக்கு எடுத்துச் சொன்னேன். இதை சொல்லாம வேற என்னத்தை சொல்லுவாங்க?
கரூர் விஷயத்துக்கு வர்றேன். கரூர்ல என்ன நடந்ததுன்னு அந்த ஊர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு புட்டு வைப்பாங்க. என்மேல பழியை தூக்கிப் போடறீங்க? இந்த விஷயத்துல நாங்க அரசியலே பண்ண மாட்டோம்ன்னு வீடியோல சொல்றீங்க. சட்டசபையில் உட்கார்ந்துட்டு என்மேல பழியை தூக்கிப் போடறீங்க. லேட்டா வந்துட்டார் என்று. போலீஸ் கொடுத்த டைம்ல நான் அங்க இருந்தேன்.
நாமக்கல்லில் இருந்து கரூர் வர்ற வழியில் இருந்த மக்களை எல்லாம் நான் அம்போன்னு விட்டுட்டு வரச் சொல்றீங்களா? நாமக்கல்லில் இருந்து கரூருக்கு நான் எப்படி வந்தேன், எவ்வளவு நேரத்துல வந்தேன் என்பதை உலகமே லைவ்ல பார்த்துட்டு இருந்தது. வாய்கூசாம என்மேல பழியை தூக்கிப் போடறீங்க? ஒரு மனசாட்சி என்பது வேண்டாமா?
சரி நீங்க தான் எதுவுமே பண்ணலையே சார்? அப்புறம் ஏன் 20 வருஷமா கரூர்ல மட்டுமே கரூர் பகுதியில் மட்டுமே போட்டி போட்ட உங்களோட ஒரு அடிமையை ஏன் கோயம்புத்தூர் வரைக்கும் ஓட வெச்சீங்க? எப்போது இந்த சூரியன் மறையும்? எப்போது இந்த சூரியன் ஒழியும்? எல்லோரும் அந்த சூரியனை வெறுத்து ஒதுக்குவாங்க. அதுதான் வருகிற தேர்தல் முடிவில் இண்டிகேசனாக இருக்கும் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.





