நடிகர் விஜய் இப்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் பணிகள் காரணமாக வருகிற மார்ச் இறுதிக்குள் படத்தை முடிக்க விஜய், டைரக்டரிடம் கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், நரேன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது. இதுதவிர சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் பெரிய வெற்றிப் படமாக தருவதில் எச் வினோத் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே தளபதி 69 படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட ரசிகர்கள் சிவராஜ்குமார் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ஒரு நேர்காணலில் அவரே வெளிப்படையாக கூறியிருந்தார். விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். விஜய் ஒரு சிறந்த நடிகர், நல்ல பண்பாளர், ஒரு தலைவராகவும் அவர் அரசியலில் சிறந்து விளங்குவார் என்றும் பாராட்டியிருந்தார்.
ஆனால் கடந்த வாரத்தில் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றடைய செய்தது. அதாவது தளபதி 69 படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவில்லை, அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னையா, சம்பள பிரச்னையா ஏன் அவர் விஜய் படத்தில் இருந்து விலகினார் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
ஏனெனில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நண்பராக அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. கேமியோ ரோலில் 2 காட்சிகளில் மட்டுமே ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தாலும் அந்த பார்வையும் கெத்தும் மாஸ் ஆன நடையும் தமிழ் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. தொடர்ந்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் நடித்திருந்தார்.
விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தில் இருந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் விலகியதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு உடல் ரீதியாக ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெற உள்ளதாகவும் அதனால்தான் தளபதி 69 படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இனி சிவராஜ்குமார் நடிக்க வேண்டிய அந்த முக்கிய கேரக்டரில் யாரை நடிக்க வைப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளளது.





