- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயலான் பட இயக்குனர் ரவிக்குமாருடன் அடுத்து கரம் கோர்ப்பது யார் தெரியுமா? போட்றா வெடிய, விரைவில்...

அயலான் பட இயக்குனர் ரவிக்குமாருடன் அடுத்து கரம் கோர்ப்பது யார் தெரியுமா? போட்றா வெடிய, விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு – ஆனா சிவகார்த்திகேயன் வாய்ப்பு தரலையேப்பா…?

- Advertisement -

இன்று நேற்று நாளை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் ரவிக்குமார். இவர் திருப்பூரை சேர்ந்தவர். அவர் இயக்கிய முதல் படத்திலேயே டைம் டிராவல் கதையை மிக எளிமையாக, ரசிகர்களுக்கு புரியும்படியாகவும் அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலாகவும் தந்திருந்தார்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம் மிக்க இயக்குனர்கள் கூட டைம் டிராவல் போன்ற அறிவியல் பூர்வமான படங்களை இயக்குவதில் தோற்றுப் போய்விடுவர். ஏனெனில் சரியான லாஜிக்கில் அந்த படம் கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே ரசிகர்களை சென்றடையும். ஒரு காட்சியில் மிஸ் ஆனாலும் படத்தின் மொத்த திரைக்கதையும் சொதப்பி விடும்.

- Advertisement -

அந்த வகையில், நேர்த்தியான திரைக்கதையில் மிகவும் சிறப்பாக இயக்கம் செய்யப்பட்ட இன்று நேற்று நாளை படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பலத்த பாராட்டை பெற்ற வெற்றிப் படமாக அமைந்தது. ரவிக்குமாரின் திறமையை பார்த்து வியந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரே இயக்குனர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டு, நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறினார். இதையடுத்துதான் அயலான் படம் உருவானது.

ஏறக்குறைய 6 ஆண்டுகளாக அயலான் படம் உருவானது. இடையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், இடையூறுகளால் படப்பிடிப்பு தடைபட்டு, ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு ஒரு வழியாக 6 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் ரிலீஸ் ஆனது. பல விதங்களில் தொழில்நுட்பம் அசத்தியிருந்தாலும், அயலான் படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

- Advertisement -

அயலான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும், நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டு மீதம் இருப்பதால் அயலான் 2 படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது வியாபார யுக்தியாக கூறப்பட்டதே தவிர அயலான் தந்த தோல்வியால், அடுத்த முயற்சிக்கு இயக்குனர் ரவிக்குமார் செல்லவில்லை.

இதனிடையே நடிகர் சூர்யா ஒன்றரை ஆண்டுகளாக ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பதாக கூறிவிட்டு, பின்பு இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார், சிவகார்த்திகேயனும் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு தரவில்லை. இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்து ரவிக்குமார் பேசியிருக்கிறார். அப்போது நம்பிக்கை தரும் வார்த்தைகளை விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். பாசிட்டிவ் நிறைந்த அவரது பதில் ரவிக்குமாரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அதனால் விஜய் சேதுபதி, ரவிக்குமார் இணையும் புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

- Advertisement -

சற்று முன்