- Advertisement -
Homeபொழுதுபோக்குத.வெ.க தொடங்கியதை அடுத்து முதல் முறையாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்... நிர்வாகிகளுக்கு அடுக்கடுக்காக உத்தரவுகளை பிறப்பித்த...

த.வெ.க தொடங்கியதை அடுத்து முதல் முறையாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… நிர்வாகிகளுக்கு அடுக்கடுக்காக உத்தரவுகளை பிறப்பித்த விஜய்…

- Advertisement -

சமீப காலமாக பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் விஜய். அண்மையில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பரிசளித்து அவர் ஊக்குவித்தார். இதேபோல் பெருமையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நேரில் சென்று அவர் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. இதை உண்மையாக்கும் வகையில் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் விஜய். அதன்படி தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என அவர் பெயர் வைத்தார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற புஸ்ஸி ஆனந்த், கட்சியை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்தார். அதேசமயம் தனது முதல் அறிக்கையை வெளியிட்ட விஜய், தனது இயக்கம் மூலமாக மக்களுக்கு தொடர்ந்து நற்பணிகளை செய்து வந்ததாகவும், தற்போது அது அடுத்த கட்டத்திற்கு செல்ல அரசியல் கட்சி தேவை என்பதால் அதை ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரம் ஒரு பக்கம், பிளவு படுத்தப்பட்ட மதவாத அரசியல் ஒரு பக்கம் என மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இவை இருப்பதாக சாடி இருந்தார் விஜய். அரசியலில் உயரம் மட்டுமல்ல, நீல அகலத்தையும் எமது முன்னோர்கள் வழி நின்று பார்த்து மனதளவில் பக்குவப்பட்டு இருப்பதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். அரசியல் தனது பொழுதுபோக்கு அல்ல என்றும் புனிதமான பணி எனவும் விஜய் கூறியிருந்தார்.

தான் ஒப்பந்தமாக இருக்கும் இன்னொரு திரைப்படத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப் போவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் விஜயின் கோட் படத்திற்குப் பிறகு அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடங்கியதை எடுத்து முதல் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய விஜய், தடைகளையும், விமர்சனங்களையும் புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள் என்று பேசி இருக்கிறார். மக்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கும் விஜய், கட்சியை கிராமங்களுக்கு கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். முக்கியமாக 2024 தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக உழைக்க நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

சற்று முன்